17-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஷாஜகான். இவர் தனது மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மகாலை கட்டினார். ஷாஜகான் பயன்படுத்திய தங்க முலாம் பூசப்பட்ட அவரது உடைவாள், லண்டனில் ஏப்ரல் 10-ந் தேதி ஏலம் விடப்படுகிறது. இந்த வாளை பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஜவுளி அதிபர் ஜாக்ïஸ் டெசன்பான்ஸ் வைத்திருந்தார். அவர் இறந்ததை தொடர்ந்து, இந்த வாள் உள்பட அவர் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படுகின்றன.
இந்த வாளில் ஷாஜகான் வாங்கிய பட்டங்கள், அவர் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவை எழுதப்பட்டுள்ளன. இந்த வாள் 5 லட்சம் பவுண்டுகளுக்கு (ரூ.4 கோடி) ஏலம் போகும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment