Sunday 30 March 2008

சிங்கப்பூர் அமைச்சரவையில் மேலும் ஒரு தமிழருக்கு இடம்

சிங்கப்பூர் அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவருக்கு முக்கிய இலாகா அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அமைச்சரவையை அந்நாட்டு பிரதமர் லீ சீயன் லூங் மாற்றியமைத்துள்ளார். இளம் வயதினருக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் 49 வயதான கே.சண்முகம் என்ற அரசு வக்கீல், சட்ட அமைச்சராகவும் உள்துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது துணைப் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் உள்ள ஜெயக்குமாரிடமிருந்து சட்டத்துறையை மே மாதம் 1ம் தேதி சண்முகம் ஏற்றுக்கொள்கிறார். ஜெயக்குமார் தொடர்ந்து துணைப் பிரதமராகவும், தேசிய பாதுகாப்புக் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் செயல்படுவார்.

இவர்கள் இருவர் தவிர டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தர்மன் சண்முகரத்தினம் ஆகிய தமிழர்களும் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர்.

விவியன் பாலகிருஷ்ணன் சமூக வளர்ச்சி, இளைஞர் நலம், விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

தர்மன் சண்முகரத்னம் நிதியமைச்சராக இருக்கிறார்.

சட்டத்துறையை கடந்த 20 வருடங்களாக ஜெயக்குமார் தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1988ல் இருந்து எம்.பி.யாக பதவி வகிக்கும் ஜெயக்குமாரும், சிங்கப்பூர் மூத்த அமைச்சர் கோ சோக் டாங் ஆகியோர் தற்போது அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: