Thursday, 27 March 2008

16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது.

16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது.

விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகள் அவ்வப்போது சென்று தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். விஞ்ஞானிகளையும், அவர்களுக்குத் தேவையான ஆய்வுப் பொருட்களையும் பூமியில் இருந்து கொண்டு செல்லும் பணியில் விண்கலங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்டவர் என்ற விண்கலம், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வகம் ஒன்றையும், கனடா நாட்டில் தயாரான ரோபோ ஒன்றையும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு எடுத்துச் சென்றது. இவ்விரண்டையும் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் இறக்கிய எண்டவர் விண்கலம், அங்கிருந்து கிளம்பி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இன்று அதிகாலை பத்திரமாக தரையிறங்கியது.

No comments: