Friday 28 March 2008

அமெரிக்காவில் மதுபானங்களில் பாம்புகளை ஊறவைத்து விற்பனை செய்யும் நபர் கைது

பாம்புகளை மதுபானங்களுக்குள் ஊறவைத்து, வினோத விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிழக்காசிய நாடுகளில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மருத்துவப் பொருளாக பயன் படுத்துப்படுகின்றன. இதுபோன்ற ஊரும் பிராணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளுக்கு வியட்நாம் போன்ற நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் பாம்புப் பண்ணை நடத்திவரும் போப்பல்வெல் என்ற நபர், ஊரும் சாரைப் பாம்புகளை ஓட்கா மதுவில் ஊறவைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கினார். இத்தகைய மதுவகைகள் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி விற்பனை செய்து வந்த போப்பல்வெல்லை போலீசார் கைது செய்தனர். இறந்த சிறிய ரக சாரைப் பாம்புகளை ஓட்கா மதுவுடன் அவர் விற்பனை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது பாம்புப்பண்ணையில் இருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments: