Monday 31 March 2008

துப்புரவு பெண் தொழிலாளிக்கு ரூ.9.60 கோடி பரிசு

பிரிட்டனில், துப்புரவு பெண் தொழிலாளிக்கு ஜாக்பாட் போட்டியில், ரூ.9.60 கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்த தொகையை, பக்கத்து வீட்டு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள போவதாக, துப்புரவு பெண் தொழிலாளி தெரிவித்துள்ளார். பிரிட்டனில், ஹாமில்டன் என்ற இடத்தில் வசிப்பவர் சொராயா லோவெல்(38); நான்கு குழந்தைகளுக்கு தாய். துப்புரவு பணி செய்து வருகிறார். இவருக்கு ஜாக்பாட் போட்டியில், ரூ.9.60 கோடி பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து சொராயா கூறியதாவது:எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் அக்னஸ் ஓ நீல்(68). ஜாக்பாட் போட்டியில் நான் பங்கேற்ற போது, அவர் உடன் இருந்தார். எது கிடைத்தாலும் அதை, அக்னசுடன் பகிர்ந்து கொள்வேன். இப்போதும் பரிசு தொகையை அவருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். இவ்வாறு சொராயா கூறினார். அக்னஸ் கூறுகையில்,சூ மூன்று ஆண்டுகளாக, நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். என்னை கவனித்து கொள்ள, எனது கணவர் முன்கூட்டியே, பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, என்னை கவனித்து கொண்டவர் சொராயா தான்’ என்றார். கோடிக்கணக்கில் பரிசு தொகை கிடைத்தாலும், தொடர்ந்து துப்புரவு பணியை மேற்கொள்ள போவதாக, சொராயா தெரிவித்துள்ளார்.

No comments: