அமெரிக்கா, ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய முத்தரப்புகள் கலந்துகொள்ளும் முதலாவது கூட்டு ராணுவ உளவு மையம் நேற்று, ஆப்கான்-பாகிஸ்தான் எல்லை பிரதேசத்தில் நிறுவப்பட்டது.
இது, மைல்கல்லான முன்னேற்றமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் உளவாளிகள், தகவல்களை பகிர்ந்து கொண்டு, சட்டவிரோத ஆயுத நடவடிக்கைகளை கூட்டாக ஒடுக்குவதில் முதல் முயற்சி இது என்று ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி கரிமி கூறினார்.
பாகிஸ்தானின் ராணுவ பிரதிநிதியும், வடமேற்கு பிரதேசத்தின் தலைமை தளபதியுமான முகமெட் மசூத் அலாம் பேசுகையில், பயங்கரவாத எதிர்ப்பு என்பது, முழு உலகத்தின் பொது நலனுக்குப் பொருந்தியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகியது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment