Monday 31 March 2008

ஜனாதிபதியின் பாரியாரை உயிரழக்க செய்த ரூபவாஹினியின் மூன்று ஊழியர் பணி தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பிரதி பணிப்பாளர் சுமேத அத்துலசிறி, தயாரிப்பாளர் அமால் சமந்த, மற்றும் எழுதுவினைஞர் ஒருவரும் பணியில் இந்து இடைநீக்கம் செய்யப்பட்டுளளனர். ஜனாதிபதியின் பாரியாரின் தயாரின் மரண செய்திக்கு பின்னர், ஜனாதிபதியின் பாரியார் விபத்து ஒன்றில சிக்கியுள்ளதாக ரூபவாஹினியில் செய்தி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா, அமைச்சின் உதவி செயலாளரை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்த நியமித்திருந்தார். இந்த விசாரணை அறிக்கையின் பின்னரே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூன்று பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுளளனர்.

No comments: