சென்னை புளியந் தோப்பில் ஆட்டுத் தொட்டி உள்ளது. அங்கு தினசரி இறைச்சிக்காக ஏராளமான ஆடுகளும், மாடுகளும் கொண்டு வரப்பட்டு வெட்டப்படும்.
சென்னை புறநகர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் பேட்டை, குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து எருமை மாடுகளைக் கொண்டு வந்து வெட்டுவார்கள்.
இந்த நிலையில் ஒரு லாரியில் 10 எருமை மாடுகளை கொண்டு வந்தனர். மாதவரம் 100 அடி சாலையில் லாரி வந்த போது லாரி பழுதாகிவிட்டது. எனவே மாடுகளை இறக்கி நடத்தி வந்தனர். 6 மாடுகளை ஒரே கயிற்றில் சேர்த்து கட்டி பிணைத்து இருந்தனர். மற்ற 4 மாடுகளை தனியாக ஒரு கயிற்றில் கட்டி இருந்தனர்.
அப்போது திடீரென அந்த மாடுகள் கயிறுகளை அறுத்து கொண்டு ஆவேசத்துடன் ஓடின. அப்போது எதிரே வந்த சரோஜா என்கிற 70 வயது பூ விற்கும் மூதாட்டியை ஒரு மாடு முட்டித் தள்ளியது.
இதில் அவரது முதுகு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்து அன்பழகன் தெரு வழியாக ஓடி ஊறுகாய் வியாபாரியை மாடுகள் குத்தி வீசின.
பலத்த காயமடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளா. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதேபோல மேலும் 16 பேரையும் அந்த மாடுகள் முட்டித் தள்ளின. இதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தப் பகுதியே அல்லோகல்லப்பட்டது.
இந் நிலையில் கசாப்புக்கடைக்காரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை மடக்கினர். அவற்றை அவர்கள் அடித்து இழுத்துச் சென்ற காட்சி மிகப் பரிதாபமாக இருந்தது.
No comments:
Post a Comment