முஸ்லிம்களின் புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.
Saturday, 29 March 2008
இணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment