Wednesday 26 March 2008

விண்டோஸை விழுங்கும் ட்ரோஜன் வைரஸ்- உஷார்

கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்கை நாசப்படுத்தும் புதிய வகை ட்ரோஜன் வைரஸ் இன்டர்நெட் மூலம் பரவி வருகிறது.

இன்டர்நெட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது 'அப்டேடட் விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யுங்கள்' என்ற எச்சரிக்கை மெசேஜ் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் உஷாராகி விடுங்கள். அது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் பைல்களை அழித்து, ஹார்டு டிஸ்கை முடக்கிவிடக்கூடிய 'ட்ரோஜன்' வைரஸாக இருக்கலாம்.

இதுபற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்துக்கு புதிய அப்கிரேடட் வர்ஷன்களைத் தருவதாகக் கூறி வைரஸ் ஏற்றிய பைல்களை சில போலி இணைய தளங்கள் இன்டர்நெட்டில் பரப்பிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு அறிமுகமான இமெயில் முகவரியைப் போன்றே அந்த ஸ்பாம் மெயில்களும் இருக்கும். இதை நம்பி ஸ்பாம் மெயில்களை திறந்தால் ஒரு வெப்பேஜூக்குள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அதில், “urgent install" என்ற ஆப்ஷனை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும். தப்பித்தவறி அந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்தால் அவ்வளவுதான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் ட்ரோஜன் வைரஸ் பரவிவிடும். வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுவிட்டால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் அழிந்து சிஸ்டம் கிராஷ் ஆகிவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. வைரஸை பரப்பும் ஸ்பாம் மெயில்களில் உள்ள லிங்க் ஆப்ஷனில் “install" என்ற வார்த்தைக்கு பதில் “intall" என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கும். இதுதான் வைரஸை பரப்பும் ஸ்பாம் மெயிலுக்கான அடையாளம். உஷாராக இதை கவனித்துவிட்டால் தப்பித்துக் கொள்வீர்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆபரேடிங் சாப்ட்வேரை குறிவைத்தே இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. எனவே விண்டோஸை பயன்படுத்தும்போது சிக்கல் ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் பின்பற்றவேண்டும்" என மத்திய தகவல்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சைபர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

No comments: