ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதிவேக ஒயர்லெஸ் ஐ-போனை, நடப்பாண்டின் 2ம் காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பேங்க ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மூன்றாம் தலைமுறை ஐ-போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 8 மில்லியன் அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது.
இத்தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை இன்று 2.76 டாலர் உயர்ந்து 143 டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான ஏடி&டி பங்குகளின் மதிப்பு 38.39 டாலர் என்ற அளவில் இருந்து 37.66 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் சார்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment