சர்வதேச தீவிரவாதி அல்-கொய்தா இயக்க தலைவன் பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டுகளாக வலைவீசி தேடி வருகிறது. ஆனாலும் பின்லேடனை பிடிக்க முடிய வில்லை. பின்லேடனிடம் முன்பு 1996 முதல் 2000-வது ஆண்டு வரை உதவியாளராக இருந் தவர் நாசர் அல் பாக்கிரி. 35 வயதான பாக்கிரி இப்போது பின்லேடனை விட்டு விலகி ஒமன் நாட்டில் டாக்சி டிரைவ ராக இருக்கிறார். பாக்கிரியை ஒப்படைக்கும்படி அமெரிக்க உளவுத்துறையும் போலீசாரும் வற்புறுத்தியும் ஒமன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் பின்லேடன் பற்றியும் அவனிடம் பணி யாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் பாக்கிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் பாக்கிரி கூறியிருப்பதாவது:- பின்லேடன் பற்றியும் அவனது நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உளவுத் துறை தகவல்களை பெற முயற்சி செய்தது. ஆனால் அவர் களது நடவடிக்கைகள் பற்றி பின்லேடனுக்கு முன் கூட்டியே தெரிந்து விடும். பின்லேடன் தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். காலையில் எழுந்த தும் தொழுகை நடத்துவார். சவூதி அரேபியாவில் பிறந்த நான் எனது 23 வயதில் தீவிர வாத இயக்கத்தில் சேர்ந்தேன். எங்கள் தலைவர் பின்லே டனின் மெய்காப்பாளராக பணியாற்றி வந்தேன். ஆப் கானிஸ்தான் போரின்போது அல்-கொய்தா இயக்கத்துடன் சேர்ந்து போரிட்டேன். இரவு வரை தொழுகை நீடிக்கும்.இடையே முக்கிய பிரமுகர் கள் சந்திப்பு நடக்கும். அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பார். ஏதாவது திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருப்பார். அவரது நடவடிக்கை களை யாரும் தடுக்க முடி யாது. 1990 முதல் அவரை பாதுகாக்கும் பணியில் நான் ஈடுபட்டேன். அவரது முட்டை முடிச்சுகளை நான் சுமந்து செல்வேன். செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்புகளை கவனித்து அதை பின்லேடனிடம் தெரிவிப்பேன்.
பின்லேடனிடம் நான் உதவியாளராக இருந்தபோது யாரையும் நான் சுட்டுக்கொல்ல வில்லை. “எதிராளிகளிடம் சிக்கிக் கொண்டால் என்னை சுட்டுக்கொன்று விட வேண்டும் என்று தனது உதவியாளர் களுக்கு பின்லேடன் உத்தர விட்டு இருந்தார். நல்லவேளை யாக எனக்கு அந்த துரதிர்ஷ்ட மான நிலை ஏற்படவில்லை.
முன்பு பின்லேடனை பார்க்க வந்த ஒருவர் அவரிடம் தகராறு செய்ததுடன் அவரை அவமதித்தார். நான் அவரை மடக்கி பிடித்து விட்டேன். அவரை மன்னித்து விட்டு விடும்படி பின்லேடன் என்னிடம் கூறினார். இவ்வாறு நசார் அல் பாக்கரி கூறினார்.
No comments:
Post a Comment