சென்னை, திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் 2007ம் ஆண்டு முதல் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 2007ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டின் சிறந்த படமாக பருத்தி வீரனும், சிறந்த இயக்குநராக அமீரும், சிறந்த நடிகராக சத்யராஜும், சிறந்த நடிகையாக பிரியா மணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுகள் விவரம்:
சிறந்த படம் - பருத்தி வீரன்.
சிறந்த நடிகர் - சத்யராஜ் (ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார்)
சிறந்த நடிகை - பிரியா மணி (பருத்தி வீரன்)
சிறந்த இயக்குநர் - அமீர் (பருத்தி வீரன்)
சிறந்த கதாசிரியர் - ராம் (கற்றது தமிழ்)
சிறந்த திரைக்கதாசிரியர் - வெங்கட் பிரபு (சென்னை 28)
சிறந்த வசனகர்த்தா - விஜி (மொழி)
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா ( பல படங்கள்)
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் (பல படங்கள்)
விருது வழங்கும் விழா மே மாதம் பிரமாண்ட அளவில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் தேதி, இடம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் சங்க நிறுவனர் அய்யப்ப பிரசாத் மற்றும் தலைவர் தமிழன்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
Friday, 28 March 2008
திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment