Sunday 30 March 2008

தமிழகத்தில் சிங்களவர்களின் கால்பதிக்கக்கூடாது என பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய தமிழகத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீலங்காவின் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் தலைமையில் வந்த முக்கிய பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள பேரூர் கிராமம்திருநெல்வெலியின் ஆலன்குளம் போன்ற இடங்களில் பௌத்த ஆலயங்களுக்கான அடிக்கல்லை நாட்ட வந்திருந்தனர்.

பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரமல்லாமல்அனைவருக்கும் மனிதாபிமானத்தை உணர்த்துகிறது என இதன் போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் திராவிட கழகத்தினர்குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இதனையடுத்து இந்த நிகழ்வை தமிழகத்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் வின் டிவியின் செய்தியும் செய்திபார்வையும் என்ற நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர்.டி எஸ் எஸ் மணிகடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் பௌத்த அட்டையை பயன்படுத்தி தமிழர்களை பிரிக்க முயற்சிக்கிறது என அவர் குற்றம் சுமத்தினார். இதற்கு உதாரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் சிங்கள பேரினவாதிகளான ஜாதிக ஹெல உறுமயவும் அங்கம் வகிப்பதாக மணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜெயலத் ஜெயவர்த்தன ஒரு கிறிஸ்தவராக உள்ளபோதும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமையானது அரசியலை முன்னிலைப்படுத்திய செயலாகும் என வின் டிவி ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் இதனை மறுத்துள்ள ஜெயலத் ஜெயவர்த்தன தான் ஸ்ரீலங்காவிலும் தமிழர்களுக்கு சார்பாக செயற்படும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விடுதலை ராஜேந்திரன் தான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல என்ற போதும் சிங்கள பிக்குகளுக்கு எதிரானவன் எனக்குறிப்பிட்டுள்ளார்

No comments: