Monday 10 March 2008

கூகிள் குழுவுக்கு பென்டகன் அனுமதி மறுப்பு

lankasri.comஅமெரிக்க படைத்தளங்கள் குறித்த அதிதுல்லிய வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக அனுமதி கோரிய கூகிள் குழுவிற்கு, பாதுகாப்பு காரணங்களை காட்டி அமெரிக்காவின் பென்டகன் அனுமதி மறுத்துள்ளது.உலகளவில் எந்தப் பகுதியையும், விமானத்தில் இருந்து மிக அருகே பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், வீடியோ வரைபடங்களை (video maps) உள்ளடக்கிய நவீன வசதியை கூகிள் நிறுவனம் தனது தளத்தில் ஏற்படுத்தி வைத்துள்ளது.

இதில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ள இடங்கள், நிலைப்படை உள்ள பகுதிகளைப் பற்றிய தெள்ளத்தெளிவான படங்களையும் இணைக்கும் வகையில், அவை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க பென்டகனிடம் அனுமதி கோரியது.

ஆனால், உஷாரான பென்டகன் அதிகாரிகள் இதுபோன்ற படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கூகிள் குழுவுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

டெக்சாஸ் பகுதியில் உள்ள அமெரிக்க படைதளங்களை அதிதுல்லியமாக காட்டும் புகைப்படம் ஒன்று பிரபல இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments: