உலக படகு போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்காக கேரளாவில் தண்ணீரில் மிதக்கும் கிராமம் உருவாக்கப்படுகிறது. வால்வோ ஓஷன் ரேஸ் என்ற பெயரில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக படகு போட்டி நடைபெறும். அந்த போட்டி அக்டோபர் மாதம் ஸ்பெயினில் உள்ள அலிகான்டி என்ற துறைமுக நகரில் இருந்து துவங்குகிறது. மொத்தம் 11 துறைமுக நகரங்களை தொட்டு, 39 ஆயிரம் கடல் மைல்களை கடந்து செயிண்ட் பீட்டர் பர்க் நகரில் இந்த போட்டி முடிவடைகிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்தையும் தொட்டுச்செல்கின்றனர். உலக படகு போட்டியில் பங்கேற்பவர்கள் டிசம்பர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை கேரளாவில் தங்கவுள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தண்ணீரில் மிதக்கும் கிராமத்தை உருவாக்கி வருகிறது கொச்சி துறைமுக கழகம்.
Sunday, 30 March 2008
கேரளாவில் உருவாகிறது மிதக்கும் கிராமம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment