Monday, 10 March 2008

குப்பைக்குண்டு - 1

மேலை நாடுக‌ளும் அல்கொய்தா போன்ற‌ தீவிர‌வாதிக‌ளின் பார்வையில் ப‌ட்ட‌ நாடுக‌ளும் இன்று மிக‌ப்பெரிய‌ ஒரு ஆப‌த்தான‌ சூழ‌லில் சிக்கியுள்ள‌து. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அதாவ‌து அமெரிக்க‌ இர‌ட்டைக் கோபுர‌ தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ பிற‌கு தேடுத‌ல் வேட்டை தீவிர‌ப‌டுத்த‌ப‌ட்ட‌ ச‌ம‌ய‌ம் 2004 - டிச‌ம்ப‌ரில் தாலிபானின் க‌ட்டுபாட்டில் இருந்த‌ ஆப்கானை மீட்ட‌ பிற‌கு ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் ஒன்றான‌ சூடானில் ஒரு அல்கொய்தா தீவிர‌ வாதியின் கைதை அடுத்து ஒரு திடுக்கிடும் செய்தி வெளியான‌து. ஆம் அல்கொய்தா தீவிர‌வாதிக‌ள் சில‌ விஞ்ஞானிக‌ளின் உத‌வியால் அணுகுண்டுக‌ளை த‌யார் செய்வ‌து போன்ற‌ ஆராய்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டு கொண்டிருக்கின்ற‌ன‌ர் என்ற‌ அந்த‌ செய்தி பாதுகாப்பு ஏஜென்சிக‌ளுக்கு எச்ச‌ரிக்கை ம‌ணி அடித்தாலும் அவ‌ர்க‌ள் அதை வெளிகொணராம‌ல் விட்டுவிட்ட‌ன‌ர்.



இத‌ற்கு ஒரு கார‌ண‌மும் உண்டு ஏற்க‌ன‌வே இர‌ட்டை கோபுர‌ம் த‌க‌ர்க்க‌ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சியால் மிர‌ண்டிருந்த‌ ம‌க்க‌ளுக்கு இது மேலும் ஒரு பாதுகாப்பின்மை த‌ன்மையை உருவாக்கி அது அமெரிக்க‌ அதிப‌ரின் ப‌த‌விக்கு வேட்டு வைக்கும் என்ற‌ கார‌ணத்தாலோ என்னவோ.

அணுகுண்டு த‌யாரிப்ப‌து லாலா க‌டை அல்வா த‌யாரிப்ப‌து போல் எளிதான‌ காரிய‌ம‌ல்ல‌. ஆனால் அதே நேர‌த்தில் விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சியில் கால‌ப்போக்கில் தீவிர‌வாதிக‌ள் த‌ங்க‌ள‌து அறிவுத்திற‌னை வ‌ள‌ர்த்து பேர‌ழிவு சாத‌ன‌ங்க‌ளை உருவாக்கிவிட்டால்? இத‌ற்கு ப‌தில் அமெரிக்க‌ர்க‌ளுக்கு கூட‌ குலை ந‌டுங்க‌ வைக்கும் ஒரு ப‌தில். இத‌ற்கான‌ ப‌திலை தெரிந்து கொள்ளும் முன்புஇ

நாள் 11.02.08 நேரம் சரியாக பகல் 2:30 மணி ஆப்கானிற்கான பகிஸ்தான் துதருமான திரு தாரிக் அஸிஸ்சுத்தீன் காபூலில் இருந்து பாகிஸ்தான் எல்லை நகரமான பெஸவருக்கு தனது காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது கடத்தப்பட்டார். தாலிபானின் சீனியர் கமான்டர் ஒருவர் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இவர் கடத்தப்பட்டார்.

உல‌கின் பார்வைக்கு கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ தாலிபான் க‌மாண்ட‌ரை விடுவிக்கும் நோக்கில் க‌ட‌த்த‌ ப‌ட‌லாம் என்ற நினைப்போடு இருக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல.
தீவிர‌வாதிக‌ளின் முக்கிய‌ நோக்க‌ம் தாரிக்கின் மூல‌ம் பெரும் அழிவு பொருள் ஒன்றை செய்வ‌த‌ற்காக‌ ஆம் அணுகுண்டு தயாரிப்ப‌த‌ற்கான‌ வ‌ழிமுறைக‌ள் பெறுவ‌த‌ற்காக‌.

ஆப்கான் தூதுவ‌ருக்கும் அணுகுண்டிற்கும் என்ன‌ உற‌வு என்றால் ஒரு அதிர்ச்சி செய்தி. பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி க‌ழ‌க‌த்தின் முன்னால் த‌லைவ‌ரும் விஞ்ஞானியும் இதே தாரிக் அஸ்ஸிசுத்தீன்.

இப்பொழுது முத‌லில் கேட்ட‌ கேள்விக்கான‌ விடை கிடைத்திருக்கும்இ ஆனால் உண்மையில் தீவிர‌வாதிக‌ளின் உண்மை நோக்க‌ம் வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ளை போல் அணுகுண்டு தயாரிப்ப‌து அல்ல‌.

தாங்கள் த‌யாரிக்கும் அணுகுண்டுக‌ள் மேலை நாடுக‌ளுக்கு ப‌ல‌ யுக‌ங்க‌ளாக‌ ச‌காராவாக‌ ஆக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌ம்இ முக்கிய‌மாக‌ த‌ற்பொழுது ஒரு இட‌த்தில் அணுகுண்டு வீசும் பொழுது ஒரு ந‌க‌ர‌ம் என்ற‌ அள‌விற்கு ம‌ட்டுமே பாதிக்கும். அணுகுண்டு த‌யாரிக்கும் திற‌ன் ம‌ற்றும் அதைக் கொண்டு செல்லும் வல்லமை எல்லாம் சிறிய‌ அள‌வு அணுகுண்டால் ம‌ட்டுமே முடியும். அதுவும் சில‌ காரிய‌ம் கெட்டு போய்விட்டால் இவ‌ர்க‌ள‌து திட்டம் இல‌க்கை அடையாம‌ல் போய்விட‌லாம். அத‌ற்கு இவ‌ர்க‌ள் எடுத்திருக்கும் புதிய‌ வ‌டிவ‌ம் குப்பைக்குண்டு என‌ப்ப‌டும் ட‌ர்டி பாம். ஆம் இவை அணுக்க‌ழிவுக‌ளில் இருந்து த‌யாரிக்க‌லாம் இவ‌ற்றை கையாள்வ‌து எளிது.

இதை த‌யாரிப்ப‌த‌ற்கான‌ மூல‌ப்பொருட்க‌ள் தீவிர‌வாதிக‌ளின் ந‌ட்பு நாடுக‌ளான‌ சில‌ சாகாரா பாலைவ‌ன‌ நாடுக‌ளின் உள்புர‌ங்க‌ளில் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள் த‌ங்க‌ள‌து அணுக்க‌ழிவுக‌ளை மில்லிய‌ன் ட‌ன் க‌ண‌க்கில் கொட்டி வைத்திருப்ப‌து இவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌ப்பிர‌சாத‌ம்.

இவ்வ‌கை அணு குண்டுக‌ள் ஆர‌ம்ப‌த்தில் மிக‌ப்பெரிய‌ அள‌வில் சேத‌மேற்ப‌டுத்தாவிட்டாலும் நாள‌டைவில் அது போட‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் இருந்து ப‌ல‌ ஆயிர‌ம் கி.மீட்ட‌ர் ப‌குதிக‌ளை த‌ன‌து க‌திரிய‌க்க‌த்தால் பாலைவ‌ன‌மாக்கிவிடுவ‌து ம‌ட்டும‌ல்லாது எந்த‌ ஒரு உயிரின‌மும் வாழ‌ இய‌லாம‌ல் செய்துவிடும். இது வாஷிங்ட‌ன் ந‌க‌ரில் போட‌ப்ப‌டுமானால் பாஸ்ட‌ன் முத‌ல் மிச்சிக‌ன் வ‌ரை இத‌ன் பாதிப்பு இருக்கும் என்ப‌து உல‌க‌ அணு விஞ்ஞானிக‌ளின் க‌ருத்து.
thank you:athikaalai

1 comment:

Anonymous said...

See Here or Here