பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா? உண்மையில் அப்படி இல்லை. மனிதர்களுக்குத் தான் இருளை கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறது. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது, லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லுõரியின் ஆராய்ச்சிக்குழு. இருள் சூழ்ந்து இருக்கும் போது, நிழலைப் பார்த்து, இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக் கொள்கிறது. கண்களால் காணும் காட்சி, முழுமையாக மூளைக்கு சென்றடைவதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன் பின் ஒன்றாக, இரண்டு பந்துகளை வீச செய்த போது, வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும், மூளையையும் ஏமாற்றும் செயல். உண்மையில் மூன்றாவது பந்து வீசப்படாத போது, அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும், வீசப்பட்ட பந்து, மற்ற இரு பந்துகளை போல மறைந்து விடுவதாகவும் மூளை உருவகப்படுத்திக் கொள்கிறது.
இது மட்டுமின்றி,கம்ப்யூட்டர் திரைகள் மூலமும், மூளையை கண்கள் ஏமாற்றும் சோதனைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில், 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய, பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப் பட்டது.
இந்த சோதனையின் போது, உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தை விட, அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை, அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது. இதன் மூலம் ஒளி இல்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள், மூளையை ஏமாற்றும் விதமான உருவங்களில் தோன்றுகிறது. இதைத் தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்து கொள்கிறது.
1 comment:
useful article for us and specially for kids.I remember this song "Veppamara uchchiyil ninnu peyonru aaduthunnu"
Thanks.
Post a Comment