சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் டில்லி வந்தபோது அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது.
உதகையில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 6 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அப்பாவி தமிழர்கள் பலர் நாள்தோறும் சிங்கள இராணுவத் தினராலும் இராணுவக் கைக்கூலிகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
நாள்தோறும் தமிழர்கள் வாழும் இடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகின்றன.
உலக நாடுகளின் கண்டனங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சிங்கள இராணுவம் தமிழர்களை வேட்டையாடி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் கொலை ஆயுதங்கள் வாங்கி குவிப்பதோடு இந்தியாவிடமும் ஆயுதங்களை பெற்று தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறது.
இந்த கொலைகார இராணுவத்தின் தலைமைத் தளபதிக்கு சிறப்பான வரவேற்பை இந்திய அரசு வழங்கியது கண்டு தமிழர்களின் நெஞ்சமெல்லாம் புண்பட்டு உள்ளது.
நோக்கம் என்ன?
பொன்சேகாவின் திடீர் இந்திய பயணத்தின் நோக்கம் என்னை பற்றி திடுக்கிடும் செய்திகள் கிடைத் துள்ளன.
விடுதலைப் புலிகள் கைவசம் உள்ள வன்னிப்பகுதி மீது முழு மூச்சுடன் பெருந்தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்ற சிங்கள இராணுவம் திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மன்னார் பகுதியில் ஊடுருவ முயன்ற சிங்கள இராணுவம் புலிகளின் கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு பெரும் இழப்புகளுடன் பின் வாங்கி உள்ளது. இந்தச் சூழ்நிலையில் வன்னிப்பகுதி தாக்குதலில் நிச்சயமாக பின்னடைவு ஏற்படுமென பொன்சேகா அஞ்சுகிறார். அப்படி பின்னடைவு ஏற்பட்டால் புலிகள் தொடர்ந்து முன்னேறி யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றக் கூடும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் இந்திய இராணுவத்தின் உதவி தங்களுக்குத் தேவைப்படும் என அவர் கருதுகிறார். அந்த உதவியைப் பெறவே அவர் தில்லி வந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாதுகாப்புத் துறை ஆலேசாகர் .எம்.கே. நாரயாணன் மற்றும் இந்திய இராணுவத் தலைமைத் தளபதி உள்ளிட்ட பலரை அவர் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
இந்தியாவின் தரப்பில் கிடைத்த பதிலால் திருப்தியுடன் அவர் திரும்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
தில்லியின் தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து போராட வேண்டிய கட்டம் உருவாகி விட்டது. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணப் பொழுதும் ஈழத் தமிழர்களுக்குப் பேராபத்தாக முடியும் என்பதில் அய்யமில்லை.
thank you:then seithi
மலர்: 10 | இதழ்: 3 | தி. ஆ. 2039 பங்குனி 1 (16-03-2008) |
2 comments:
you are right! we all shd tell india to press sl for political solution soon,,!
இலங்கை இராணுவ தளபதி இந்தியா வந்த போது ஒன்றும் பேசாத பல இயக்கங்கள், அவர் சென்ற பிறகு முழக்க மிடுவது வருத்தத்திற்க்குறியதே.
இந்திய கடற்ப்படை மிகவும் பலவீனமாக உள்ளது , இருக்கும் ஒரே விமாணம் தாங்கி கப்பலும் பழுதாகிவிட்டது.
இந்தியாவிடம் ஏற்க்கனவே இராடார்கள் வாங்கி அனுபவித்து விட்டனர்.
சிவகாசியில் இருந்து துப்பாக்கிகள், இராக்கேட்டுகள் எல்லாம் குரைந்த விலையில் வாங்கி கொண்டு போ என்று அந்தோனியார் சரத்திடம் சொல்லீருப்பார் போலும்
Post a Comment