பிலியந்தல குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் மேலும் 13 சிங்கள புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு தலா 50,000 ரூபாவை விடுதலைப் புலிகள் சம்பளமாக வழங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஒருவரையும் மற்றும் இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் ஒருவரையும் கொலை செய்யுமாறு கிளிநொச்சியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பிலியந்தலை குண்டு வெடிப்புச் சூத்திரதாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பிலியந்தலை, கெஸ்பாவ, தெஹிவல மற்றும் கல்கிஸ்ஸ பிரதேச பஸ் நிலையங்களில் சிவில் மக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்துமாறு கிளிநொச்சியிலிருந்து உத்தரவு கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிலியந்தலை குண்டு வெடிப்புடன் தொடர்புடைய சிங்கள நபர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரணசிங்க ஆரச்சிகே புத்திக என்ற 21 வயது இளைஞர் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக காவற்துறைத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவமொன்றில் பணியாற்றும் புத்திகவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாதமொன்றுக்கு 50,000 ரூபா சம்பளமாக வழங்கியதாகத் கூறப்படுகிறது. கொழும்பில் குண்டு வெடிப்பை மேற்கொள்ளவதற்கு உதவி புரிவதற்காக 13 சிங்கள நபர்களுக்கு புலிகள் மாதாந்தம் சம்பளம் வழங்குவதாக குறித்த இளைஞரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 30 April 2008
புலிகளிடம் சம்பளம் பெறும் 13 சிங்களவர்கள்: இரகசிய காவற்துறை:
இத்தாலியில் நடைபெற்ற 'நாட்டுப்பற்றாளர் நாள் - 2008" நிகழ்வின் படத்தொகுப்பு
இத்தாலி மேற்பிராந்திய நாப்போலி நகரில் 20.04.08 அன்று மாலை வியா றோமா வீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலய மண்டபத்தில மாலை 16:30 மணிக்கு அன்னை பூபதியின் 20 ஆம் ஆண்டு நிகழ்வும், லெப். கேணல் கலையழகனின் முதலாம் ஆண்டு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நினைவு வணக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்களைத் தொடர்ந்து கலை பண்பாட்டுக் கழகத்தினரின் எழுச்சி கானங்கள், கவிதைப் பேச்சுக்களுடன் நிகழ்வு நிறைவேறியது.
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் இடைக்கால நிர்வாக சபை:
வடமாகாண நிர்வாகத்தை முழுமையான கட்டுப்பாட்டுள் கொண்டுவரும் இடைக்கால நிர்வாக சபையினை அரசாங்கம் அமைத்துள்ளது.
வடமாகாண செயலணிக் குழு என்ற பெயரிலான இந்த இடைக்கால சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு உட்பட வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்பாட்டுக் குழுவினை அமைக்கும் முகமாக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட விஷேட அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.
இதனபடி வடக்கு மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்தல், அதற்காக் தற்போது ஆரம்பிக்கபபட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கைகளை விரிவாக்குதல் என்பன இந்தக் குழுவின் பிரதான பணிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு வட மாகாண சபையினை உருவாக்கும் வரை, இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளின்; ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான விசேட செயற்பாட்டுக் குழுவாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ ஆகியோரை உறுப்பினர்களாக உள்ளடக்கிய நிர்வாகக் குழுவினால் வழிநடத்தப்படவுள்ளது.
இந்த செயலணி வடமாகாணத்தின், யாழ்ப்பாணம், முல்லைத்தீவுடு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை நிலமையினை கட்டியெழுப்புவதற்காக சுகாதார சேவைகள,; குடிநீர் நீர்ப்பாசனம், மின்சாரம், தொலைத்தொடர்புகள் பெருந்தெருக்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பாடசாலைக் கல்வியினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது, விவசாயம், கால்நடைகள், மற்றும் மீன்பிடி தொழில் துறைகளை அபிவிருத்தி செய்வது போன்ற மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை இம்மாவட்டங்களில் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிர்வாகக் குழவானது அனைத்து அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் மூலம் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். பொதுமக்களை மீள்குடியேற்றுதல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும். சர்வகட்சி பிரதிநிதிகளது குழுவின் மூலம் பரிந்துரைக்கப்படுகின்ற ஆலோசனைச, நிறைவேற்றாளர் சபை போன்ற நிறுவனங்களுக்கிடையே தகுந்த ஒருங்கிணைப்பினை உருவாக்குவதுடன் தேவையான சந்தர்ப்பங்களின் போது வடமாகாண ஆளுநருக்கு திட்டங்களையும் கருத்துக்களையும் இந்நிர்வாகக்குழு முன்வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைவர்களை கடத்த திட்டம் : கருணா பிரிவு சதி
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவ முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்த போரில் தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப்புலிகளும் ஊடுருவ வாய்ப்புகள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப்புலிகள் மீது இந்த பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு ரோந்து பணியில் போலீசார் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், லாட்ஜகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறையினால் ஆப்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர்வு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான ஆப்கானிய மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும், சிலர் அயல்நாடான பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்திருப்பதாகவும் ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகக் குறைந்தது, 1,000 பேராவது உணவுப் பற்றாக்குறை காரணமாக ஆப்கானின் வடக்கு மாகாணமான பதகஸ்கானின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமது வீடுகளை விட்டும் வெளியேறியிருக்கின்றனர் என ஆப்கான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அதிகாரி நாசிர் ஹெமாத் தெரிவித்திருக்கிறார்.
"இவர்களில் பலர் வேறு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறையினால் இடம்பெயர்ந்துள்ள கந்தஹார்,சாபூல், ஹெல்மண்ட், மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே ஆப்கானில் இடம்பெற்றுவருகின்ற ஆயுத மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் கோதுமை மாவின் விலை 100 வீதத்தினால் அதிகரித்திருப்பதாக ஆப்கான் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் உணவு ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் உணவுச் சந்தை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“விமல் தனது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளார்,அவர் எங்கு வாழ்கிறார் என்பது தெரியாதுள்ளது-- ரில்வின் சில்வா
விமல் வீரவன்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது பற்றி எந்தவிதமான கவலையும் இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அவ்வாறு புதிய கட்சியொன்று உருவாக்கப்படுமாயின் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏனையவர்களின் கட்சி உறுப்புரிமை இல்லாமல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
நந்தன குணத்திலகவுடனோ அல்லது கமல் தேசப்பிரியவுடனோ இணைந்து செயற்படுவதற்கு விமல்வீரவன்சவுக்கு சுதந்திரம் உள்ளது என இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
கட்சியின் பிரசார செயலாளராக விமல் வீரவன்சவை கட்சி தொடர்ந்தும் கருதிவருகின்ற போதும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கு தற்பொழுது எதிர்ப்புத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என ரில்வின் சில்வா தெரிவித்தார்.
“விமல் தனது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளார். எனவே, அவரைத் தொடர்புகொள்வதற்கு வழியில்லை. அவரைச் சென்று எம்மால் சந்திக்கமுடியாதுள்ளது, ஏனெனில் அவர் எங்கு வாழ்கிறார் என்பது தெரியாதுள்ளது. பெல்வத்தவிலுள்ள கட்சியின் தலைமையகம் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது” என ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
எதிர்வரும் மே 1ஆம் திகதிக்கு முன்னர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த ஜே.வி.பி.யின் தலைமைப்பீடம் முன்வராவிட்டால் புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்தப் போவதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச நேற்று அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகள் அதிகரித்துள்ளன- அமெரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்துகின்றபோதும், விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக துணை இராணுவக் குழுக்களை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் தோன்றியிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள 2007ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் பாரிய வன்முறைச் சம்பங்கள் அதிகரித்திருப்பதுடன், பெருமளவானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டு தரப்பினரும் கடந்த வருடம் முழுவதும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 28ஆம் திகதி சமூக சேவைகள் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்களை இலக்குவைத்து பல பேரூந்துக் குண்டுத் தாக்குதல்களும், தொடரூந்துக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் 2ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானப்படையினரின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமையையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கருணா குழுவினரும் படுகொலைகளில் ஈடுபடுவதுடன், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இந்தக் குழுவின் முன்னாள் தலைவர் கருணா அம்மான் லண்டனில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் தலைவராகச் செயற்பட்டு வருவதுடன், கருணா தரப்பினரின் முழு கட்டுப்பாட்டையும் அவரே எடுத்துக்கொண்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜுலை மாதம் கிழக்கு மாகாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் தனக்குள் காணப்பட்ட அரசியல் குழறுபடிகள் காரணமாக தேர்தலை நடத்துவதற்கோ, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கோ முடியாதிருந்தது. எனினும், இலங்கையின் வடக்கின் சில பகுதிகளை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை கடந்த நவம்பர், டிசம்பர் பகுதிகளில் இலங்கை அரசாங்கப் படைகள் ஆரம்பித்துள்ளன.
விடுதலைப் புலிகளும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் துணைஇராணுவக் குழுக்களும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை முன்னெடுத்துவருவதாக மனித உரிமை அமைப்புக்களும், கண்காணிப்பாளர்களும் கூறியிருப்பதாக அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கருணா தரப்பினர் சிறுவர்களைப் படையில் இணைத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக 2007ஆம் ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.பிலியந்தலை குண்டுவெடிப்பு சந்தேக நபர் கைது - காவற்துறை:
பிலியந்தலையில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.
இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் பிலியந்தலையில் ஒரு சிங்களவர் வீட்டில் தங்கியிருந்தே இவர் இந்த தாக்குதலை ரிமோட் கொன்ரோல் கருவி மூலம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து நுவரெலியவை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரும் மற்றும் ஒரு தமிழ் இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஜெயராஜின் கொலை தொடர்பில் கைதான பெண் சயனைட் உட்கொண்டு மரணம் - பிரேத பரிசோதனையின் போது இது உறுதி
இது தொடர்பாகத் தகவல் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், என்.கே.இலங்கக்கோன், மரணமடைந்த ராணியின் இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதில் சையனைட் கலந்திருந்தமையை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்தே திடீர் சுகவீனமடைந்து அவர் மரணமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மர்மமான முறையில் மரணமடைந்த 35 வயதான ராணி என்ற தமிழ்ப் பெண் சையனைட் உட்கொண்டே மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். பிரேத பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராணி சந்தேகத்தின் பேரில் கைதான போது காவல்துறையினரால் கடுமையாகச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும், மிகவும் ரகஸியமான முறையில் சையனைட் வில்லை ஒன்றை இவர் கொண்டுவந்திருக்கின்றார் எனவும் காவல்துறையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மரணமடைந்த சந்தேகநபர் வவுனியாவைச் சேர்ந்தவர் என அவரது அடையாள அட்டையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் குறிப்பிட்ட அடையாள அட்டை போலியானது என்பது விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயைப் படுகொலை செய்த தற்கொலைக் குண்டுதாரியுடன் நெருக்கமான தொடர்புகளை ராணி வைத்திருந்ததாகவும் காவல்துiயினர் குறிப்பிடுகின்றார்கள்.
கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படை அதிகாரிகள் பலி.
வவுணியா துட்டுவேவா பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரண்டு அதிரடிப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை வழமையான வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக வவுணியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாம்புக்கு பால் புகட்டும் பெண் : நாகப்பட்டினத்தில் அபூர்வம்
நாகப்பட்டினம்: கொடிய நச்சுப் பாம்பை பாசத்தோடு அள்ளி மடியில் போட்டு, செல்லமாக பால் புகட்டுகிறார் கிராமத்து பெண் ஒருவர். நாகை, நியூ ஆர்ச் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(32); காய்கறி வியாபாரி. கடந்த 28ம் தேதி அதிகாலை அப்பகுதியில் உள்ள மேரி என்பவர் வீட்டில், மூன்றரை அடி நீள நல்லப்பாம்பு ஒன்று, நசுங்கி இறந்து கிடந்தது. தனலட்சுமி தன் வீட்டிற்கு அருகே முனீஸ்வரன் கோவிலில் பாம்பை புதைக்க குழி தோண்டியுள்ளார். அப்போது பாம்பு அசைந்ததால், மகிழ்ச்சியடைந்தவர் பாம்பு முகத்தில் இருந்த புழுக்களை அகற்றி மஞ்சள் அரைத்து பற்று போட்டு சிகிச்சை அளித்தார். மடியில் கிடத்தி, தினமும் சிரெஞ்ச் மூலம் பாம்புக்கு பால் ஊட்டி வருகிறார். மரண விளிம்புக்குச் சென்ற பாம்பு, தனலட்சுமியின் அன்பான கவனிப்பால் உயிர் பிழைத்துள்ளது. தனலட்சுமி அழைக்கும் போது பாம்பு தலையை உயர்த்தி நன்றியோடு பார்க்கிறது. ஆண்களைக் கண்டால் சீறி படமெடுக்கிறது.
இது குறித்து தனலட்சுமி கூறுகையில், "இந்த பகுதியில் யாருடைய வீட்டில் பாம்பு வந்தாலும் அடிக்காமல் என்னை கூப்பிடுவார்கள். பாம்பை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டு விடுவேன். பாம்பைக் கண்டால் பயம் வருவதற்கு பதில் பாசம் தான் வருகிறது. பாம்பை பாசத்தோடு பிடிக்கும் என்னை, பாம்புகள் எதுவும் செய்யாது. முன் ஒருமுறை தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பாம்பு, மைனா குருவியை விழுங்கி விட்டது. நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதை தோளில் தூக்கி வந்தேன். என்னை கண்டு அனைவரும் பயந்தனர். அந்த பாம்பை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது' என்றார். கரப்பான் பூச்சிகளைக் கண்டால் இவர் அலறித்துடித்து விடுவாராம்.
17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறேன் என்னை விடுதலை செய்யவேண்டும் ஐகோர்ட்டில் நளினி மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் என்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
பிரியங்கா சந்திப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினி (வயது 37) வேலூர் பெண்கள் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வேலூர் ஜெயிலில் நளினியை ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்து பேசினார்.
மிக, மிக ரகசியமாக நடந்து முடிந்த இந்த சந்திப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐகோர்ட்டில் மனு
இந்தநிலையில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா கோர்ட்டு தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 11.5.1999-ல் இதில் 19 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. 3 பேருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மீதி 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர்.
எனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கலாம் என்றும், பொதுமன்னிப்பு வழங்கலாம் என்றும் சோனியாகாந்தி தெரிவித்தார். இதன்பின்னர் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்தது. எனது கருணை மனுவை ஏற்று, கவர்னரும் ஆயுள் தண்டனையாக குறைத்தார். 24.4.2000 அன்று இது அரசு அறிவிப்பாக வெளியிடப்பட்டது.
16 ஆண்டுகளுக்கும் மேலாக
25.4.2000 முதல் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறேன். 16 ஆண்டுகள் 9 மாதம் 18 நாட்கள் ஜெயிலில் இருந்து வருகிறேன். 17.6.2005 அன்றே 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆகவே, விடுதலை பெற எனக்கு தகுதி உள்ளது. 2005, 2006, 2007 ஆகிய 3 ஆண்டுகளிலும் கைதிகளை விடுதலை செய்யும் பட்டியலில் என்னை சேர்க்கவில்லை. 14.9.2006-ல் மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் 472 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தவறு செய்யாதவர்
நான் சிறையில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. எனது நன்னடத்தை நன்றாக உள்ளது. என்னை விடுதலை செய்யலாம் என்று நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும், ஆலோசனை குழு கேட்கவில்லை. ஆகவே, என்னை விடுதலை செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
முறையானதல்ல
நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நளினி சார்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜரானார்கள். வக்கீல் எஸ்.துரைசாமி வாதாடுகையில், `ஆலோசனை குழுவில் 7 பேர் இருக்க வேண்டும் என்றும், ஆனால், 3 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அதுவும் முறையாக இந்த குழு நியமிக்கப்படவில்லை' என்றும் வாதாடினார். ஜெயிலின் நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும், ஆலோசனை குழு அந்த பரிந்துரையை ஏற்காதது தவறு என்றும் அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார்.
ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டாக இருந்தாலும் ஜெயில் விதிமுறைப்படி 14 ஆண்டுகள் இருந்தாலே முன்கூட்டியே விடுதலை செய்ய ஆலோசனை குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் வக்கீல் துரைசாமி வற்புறுத்தி கூறினார்.
இதன்பிறகு அரசு தரப்பு வக்கீலை பார்த்து, இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மனுவை விசாரணைக்கு அனுமதித்து, இதுபற்றி பதில் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கும், ஆலோசனை குழு, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள்
இந்திய கடலோர எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றி வளைப்பு
இந்திய கடலோர காவல் படையினர், அதிகாரி ராஜன் தலைமையில் கடந்த 28-ந் தேதி இரவு சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடலோர எல்லை அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
அங்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் விசைப் படகுகளில் இருந்த 15 இலங்கை மீனவர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
மீனவர்களையும் பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் கடலோர காவல் படையினர் நேற்று சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்போது இலங்கை மீனவர் கிறிஸ்டோபர் என்பவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே, அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன் பின், இலங்கை மீனவர்கள் 15 பேரும் ராயபுரம் உதவி கமிஷனர் மாடசாமி தலைமையில் வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் சபானந்தத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இறுதி முடிவு
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மீனவர்கள் அனைவரும் இலங்கையின் நீர்கொழும்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பின் கலெக்டர் தலைமையில் உள்ள கூட்டு நடவடிக்கை குழு முன்பு இவர்களை ஆஜர்படுத்த இருக்கிறோம். அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார்கள்'' என்றார்.
மகிந்தவுக்கு மே தினம் கொண்டாடும் யோக்கியதை உண்டா ?
த. மனோகரன் மே தினம் அதாவது தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகின்றது. உழைக்கும் மக்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இன, மத, மொழி, நாடு போன்ற சகல வேறுபாடுகளையும் கடந்ததாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை ஓங்கிப் பறைசாற்றும் எழுச்சி தினமாக இந்நாள் கருதப்படுகின்றது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்நாள் நமது நாட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரத்தான் செய்கின்றது. ஆனால், அதன் அடிப்படைக் கோட்பாடு மட்டும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு அதன் மேல் நின்று ஆர்ப்பரிப்பு செய்யப்படுகின்றது என்றால் அதுவே உண்மையாகும். ஆம், இலங்கையில் மேதினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியை, எழுச்சியைக் காட்டும் தினமாகவன்றி அரசியல் கட்சிகளின் ஆள்திரட்டும் ஆற்றலை, செல்வாக்கைக் காட்டும் ஒரு அரசியல் நிகழ்வாகவே தொடர்ந்து வருவது பற்றி கூறித் தான் ஆகவேண்டும். அது மட்டுமல்ல, இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியிலே தொழிலாளர் என்ற வர்க்க உணர்வு மழுங்கி இனவாத உணர்வு மேலோங்கி வெளிப்படுவது யதார்த்தமாயுள்ளது. 1956 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் தினமான மேதினம் இந்நாட்டில் அரச அங்கீகாராம் பெற்ற விடுமுறை தினமாகவும் பிரகடனப் படுத்தப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் மதிப்பை மேம்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதே ஆண்டில் தான் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச துறையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அரச கரும மொழித் தேர்ச்சியின்மையால் தொழில் இழக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கியத்தின், உரிமையின் கறைபடிந்த ஆண்டாக அமைந்துவிட்டது என்பது வரலாற்றின் ஒரு பக்கமாகும். தொழிலாளர் ஐக்கியம், வர்க்கம் பற்றிக் குரலெழுப்பும் இலங்கையிலுள்ள எத்தனை தொழிற் சங்கங்கள் அரசதுறையிலிருந்த தமிழ்த் தொழிலாளர் வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்தன. தொழிலாளர் வர்க்க உணர்வை விட இன, மொழி பாகுபாடுகளுக்குத் துணை போனவை எவ்வாறு வர்க்க ஒற்றுமைபற்றிய உணர்வு பூர்வமான தினத்தை கொண்டாடும் யோக்கியதை உள்ளன ? இந்நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தில் மிகப் பெரும்பான்மையினர் பெருந் தோட்டங்களில் தொழில் செய்யும் நாளந்த கூலித் தொழிலாளர்கள் அவர்கள் படும் துன்பங்கள், துயரங்கள் தொடர்பாக நாட்டிலுள்ள எத்தனை தொழிற் சங்கங்கள் குரல் கொடுத்தன, குரல் கொடுக்கின்றன. குறைந்த ஊதியத்திற்கு அடிப்படை வசதிகளற்ற நிலையில் அவதியுறும் பெருந் தோட்டத் துறைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்களென்பதாலா இவ்வாறான பாராமுகம் ? நாட்டில் நிலவும் சூழ்நிலையால் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியாது அகதி வாழ்வு வாழும் விவசாயத் தொழிலாளர்கள் பற்றியோ, கடலை நம்பி வாழ்ந்து இன்று கடற்றொழில் பற்றியோ சிந்திக்காது உரிமைதினமாக, ஒற்றுமை தினமாக மேதினம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. தொழில் செய்வோரை இன, மத, மொழி வேறுபாடின்றி அரவனைத்து உயர்த்தும் போது தான் இத் தினத்தின் நோக்கம் உறுதிப்படுத்தப்படும். தமது செல்வாக்கை வெளிப்படுத்த அரசியல் சக்தியை உறுதிப்படுத்த நடத்தப்படும் மேதினக் கொண்டாட்டங்கள் பயனற்றவை, வெறும் பகட்டானவை. தொழிலாளர் தினத்தில் இவை பற்றியும் சிந்திப்பது சிறப்பாயமையும். வெறும் அறிக்கைகள், மேடைமுழக்கங்கள், ஊர்வலங்கள் தொழிலாளர் தேவைகளை நிறைவு செய்யாது. சிந்திப்பார்களா?
தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி வழக்குத்தாக்கல்.
தண்டனைக்காலம் முடியும் முன்னரே தன்னை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நளினிக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த முனைப்பு, பிரியங்கா வதேரா, நளினியை அண்மையில் வேலூர் சிறையில் சந்தித்த பின்னரே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தை நோக்கிச் செல்லும் இலங்கை அகதிகள்:
இலங்கையில் இருந்து 37 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இரண்டு படகுகளில் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக தமிழக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வவுனியா, மன்னார், பேசாலை பிரதேசங்களைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் பிரவேசித்துள்ளதாக தமிழக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் தற்போது அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.வி.யை தேசப்பற்றாளர் இயக்கம் பிளவுபடுத்தவில்லை - இயக்கத்தின் தலைவர்
ஜே.வி.பி. பிளவுபட்டமைக்கும் தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்திற்கும் தொடர்பில்லை என இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல்30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் ஓர் சுயதீனமான அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே.வி.பி.யிலிருந்து பிளவு படுவதற்கு தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் காரணம் என ஜே.வி.பி. தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஜே.வி.பி. மாற்றுக் குழு உறுப்பினர்களால் நிபோன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கான மண்டபத்தை தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் இணை நிறுவனமான 'மவ்பிமே தியனியோ" அமைப்பு ஒதுக்கியிருந்ததாக ஜே.வி.பி. குறிப்பிட்டிருந்தது.
மேலும், தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சேனாரத்ன டி சில்வாவே ஜே.வி.பி. பிளவுபடக் காரணம் என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
கருவன்கேனி பிரதேசத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு பிள்ளையான் குழுவினரால் அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கருவன்கேனி பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஐ.தே.க உறுப்பினர்களுக்கு பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு பிள்ளையான் குழு இடையூறு விளைவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஆறுமுகன் ஜெகனின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் சென்று கொண்டிருந்த குழுவினர் மீதே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் குழுவின் அஜித் உள்ளிட்ட சிலர் ஆயுதங்களை காட்டி ஐ.தே.க உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது வேட்பாளர் ஜெகனிற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்தால் குறித்த ஐ.தே.க வேட்பாளரை கொலை செய்து விடுவதாக பிள்ளையான் குழுவின் அஜித் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தின் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளர், தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ளவை.
முதல் இடத்தைப் பிடித்தவைகள்.
கீழே பதினாறு இடங்களின் படங்களைக் கொடுத்துள்ளேன். அத்தனைக்கும் ஒரு சிறப்பு உள்ளது.
அவை அனைத்தும் உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ளவை. அதாவது இன்றைய தேதியில் முதல்
இடத்தில் உள்ளவைகள் அவைகள்:
(மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத்தருகிறேன்)
படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படங்கள் பெரியதாகத் தெரியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிட்னி ஹார்பர் பாலம், ஆஸ்திரேலியா
(World's Costliest Stadium, England...New WEMBLEY STADIUM, London..90, 000 capacities.Cost.. $1.6 billion )
(Built by KRUPP of Germany... 45,500 Tons... 95 meters high... 215 meters long....)
(Shah Feisal mosque... Islamabad, Pakistan.Inside hall capacity... 35,000, Outside overflow capacity... 150,000..)
Cheapest room... $1000 per night... Royal suit... $28,000 per night
Inside Sitting Capacity... 50,000, Outside Overflow Capacity... 250,000
பதினாறில் உங்களுக்குப் பிடித்தபடம் எது?
(2nd le)சிலாபம் பகுதியில் நிமல் இறால் பதனிடும் மையத்தில் கருணாவிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சாராரை வைத்து ஜேவீபியின் ஒரு குழுவினர் ஆயுத பயிற்சி!!!
இந்த அணி இரண்டு தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளது. ஜே.வீ.பீயின் இரண்டு தரப்பினரும் சூழச்சிகள் குறித்து பேசி வருகின்றனர், இந்த சூழ்ச்சிகள் என்ன என்பது குறித்து மத்திய அணியினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
ஜே.வீ.பீயை பல்லின கட்சியாக உருவாக்குவதா? இல்லையா என்பது தொடர்பில் இந்த சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜே.வீ.பீயின் ரகசிய வியூகங்களில் இருந்து விடுப்பட்டு, கட்சி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது விமல் வீரவன்ஸவின் நிலைப்பாடு. ரகசிய வியூகங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து மீண்டும் ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றைய தரப்பினரின் நிலைப்பாடு.
மீண்டும் ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கரும் தரப்பினர் ஜே.வீ.பீயை மத்திய தர மக்களின் கட்சியாக வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கருதுகின்றனர்.
ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கருதும் கட்சியின் உள்ளக தலைவரான பிரேமகுமார் குணரட்னம், அஜித் மாத்யா, குமார மாத்யா ஆகிய அரசியல் சபை உறுப்பினர்களை விமல் வீரவன்ஸ தரப்பினர் சூழ்ச்சிக்காரர்கள் என குறிப்பிடுகின்றனர்.
ஜே.வீ.பீயின் ஆயுத அமைப்பு குமார மத்தையா என்ற பெயரில் அறியப்படும் இவரின் ரகசியமான தலைமையிலேயே இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய தரப்பு சில ஆயுத பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த முகாம்கள் சிலாபத்தில் உள்ள நிமால் என்பவரின் இறால் பண்ணையிலும், கருணா தரப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களின் உதவியுடன் கிழக்கிலும, இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
விமல் தரப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம், நிமால் என்ற இந்த இறால் பண்ணை உரிமையாளரினாலேயே கடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜே.வீ.பீயின் உள்ளக தலைவரான பிரேமகுமார் குணரட்னம் தொடர்பில் தற்போது அதில் இருந்து விலகி நிற்கும் நடுநிலையான அணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவர் முன்னர் ஜே.வீ.பீயின் அரசியல் சபையின் உறுப்பினராக இருந்த ரஞ்சிதம் குணரட்னம் என்ற பொறியியல் மாணவரின் சகோதராவார். 1990ஆம் ஆண்டுகளின் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கெமுனு என்ற பெயரில் இவர் திருகோணமலை மாவட்ட செயலாளராக செயற்பட்டதுடன் புளொட் அமைப்பின் உதவியுடன் கண்ணிவெடிகளை வெடிக்கும் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார்.
இதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட பிரேமகுமார் குணரட்னம் மின்னேரிய இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதன் போது அந்த முகாமின் பொறுப்பதிகாரியுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட இவர், தற்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேக்காவுடன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
இதன் பின்னர் எழுத்தாளர் ரொஹான் குணரட்ன ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டார். இதனையடுத்து விடுதலையான குணரட்னம் வெளியில் தெரியாத நிலையில் இருந்து, மீண்டும் ஜே.வீ.பீயில் முனைப்புகளை மேற்கொண்டார், ஜே.வீ.பீயினரின் சுவரொட்களை ஒட்டியவர்கள் முதல் அனைவரும் கொலை செய்யப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அரசியல் சபை, உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும், கண்ணிவெடி வைக்கும் தலைவராகவும் இருந்த பிரேமகுமார், காட்டி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவே மின்னேறிய இராணுவ முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஜே.வீ.பீயின் நடுநிலையாளர்கள்
தெரிவிக்கின்றனர். 1994ஆம் ஆண்டு ஜே.வீ.பீ மீண்டும் கட்டியெழுப்ப பட்ட போது, குணரட்னம் எந்த உதவிகளை செய்யவில்லை. ஜே.வீ.பீ மீண்டும் கட்டியெழுப்பபட்டபின்னர் நந்தன குணதிலக்கவின் ஊடாக அவர் கட்சியின் உயர் பீடத்திற்குள் நுளைந்தாகவும் ஜே.வீ.பீயின் நடு நிலையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்ட பிரச்சனை போல் 1995ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது, 88-89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயில் இரண்டு நிலைப்பாடுகளை கொண்டவர்கள் இருந்தனர். அதில் சுயவிமர்சனம் வேண்டும் என்ற பிரிவினர் இருந்த பிரிவிலேயே சோமவன்ஸ இருந்ததாகவும் இந்த பிரிவினர் இராணுவத்தினரை கொலை செய்வதை விரும்பாது இருந்ததாகவும் இராணுவனத்தினரின் குடும்பங்களை கொலை செய்ய போவதாக ஜே.வீ.பீயினர் அப்போது நாடெங்கும் ஒட்டிய சுவரொட்களுக்கு இவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரச்சினையே ஜே.வீ.பீயின் அன்றைய வீழ்ச்சிக்கு காரணமானது. குணரட்னம், சரத் ஆகியோரின் பிடியில் சோமவன்ஸ தற்போது சிக்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த தலைமை பதவியில் அனுரகுமார திசாநாயக்க குறிவைத்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் ரில்வின் சில்வா இந்த சூழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜிதஹேரத் ஜே.வீ.பீயின் பண்டாரவளை உறுப்பினர்களை காட்டி கொடுத்தவர் என ஜே.வீ.பீயின் நடு நிலையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜே.வீ.பீயில் உள்ள அடிப்படைவாதிகள் ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை தடுக்க வேண்டும் என கோரும் இவர்கள் நாட்டில் ஏற்பட்ட பிண குவியல்கள் போதும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் விமல் வீரவன்ஸ குறித்து விமாச்சித்துள்ள நடுநிலையாளர்கள் விமல் வீரவன்ஸவால் பிரசாரத்தை மாத்திரமே மேற்கொள்ளமுடியும் அவர்கள் ஒருகிணைப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளனர். எனினும் நந்தன குணதிலக்க போன்றவர்கள் அவருடன் இணைந்துள்ளமை பாக்கியமானது என்றும் தெரிவித்து;ளளனர்.
இந்த நிலையில் ஜே.வீ.பீ மீண்டும் ஆயுதம் ஏந்தும் முணைப்புகளை மேற்கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அந்த கட்சியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கட்சியின் செயற்பாடுகளை தடுக்க புனையப்பட்ட கதையே இது எனவும் 1971 ஆம் ஆண்டு 89ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை அடுத்தே ஜே.வீ.பீயினர் ஆயுதம் ஏந்தியதாகவும் கூறியுள்ளார். எனினும் 1968ஆம் 1983ஆம் ஆண்டுகளில் இருந்து யினர் ஆயுதங்களை கொண்டுள்ளதாக ஜே.வீ.பீயின் நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘Journalist are nescessary evils. - ஊடகவியலாளர்கள் அவசியமான பேய்கள்.’ லண்டன் தமிழ் செய்தியாளர் மாநாடு
தமிழ் செய்தியாளர் ஒன்றியம் - International Assosiation of Tamil Journalist - IATAJ, ஏப்ரல் 26ல் தனது வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. Media & Sri Lanka’s Conflict: Where is the truth? - ஊடகமும் இலங்கை முரண்பாடும்: எங்கே உண்மை என்ற தலைப்பில் இம்மாநாடு இடம்பெற்றது.
”இலங்கையில் இனமுரண்பாடு மீண்டும் வீச்சடைந்ததைத் தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கொலை செய்யப்டுகிறார்கள்” என இம்மாநாடு தொடர்பாக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் வெளியிட்ட கையேட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, ”எப்போதும் இல்லாத அளவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அச்சமும் யுத்தமும் உண்மைச் செய்திகளை கொண்டுவருவதை இயலாமல் செய்திருக்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு நீண்டகாலமாக உணரப்பட்டு இருக்கின்றது. முக்கியமாக ஊடகங்கள் இனரீதியான, மத ரீதியான கோடுகளால் பிளவுபட்டு உள்ளது. ஊடகத்தின் செய்திகளும் ஆசிய நிலைப்பாடுகளும் வௌ;வேறு சமூகங்களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்றாற் போல் வேறுபடுகிறது. நிலைப்பாடுகளை கட்டமைக்கிறது. இதன் காரணமாக ஊடகங்களும் முரண்பாட்டின் ஒருபகுதியாகின்றன” என தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் கையேடு தெரிவிக்கின்றது.
ஐவன் பீதுருப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இம்மாநாடு ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. அதற்கு முன் மங்கள விளக்கேற்றி இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஏனையோருக்கும் இரு நிமிட ஆஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைத் தமிழ் ஊடகங்களின் வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழர் தகவல் ஏட்டின் ஆசிரியரும் ஐபிசி வானொலியின் ஆரசியல் ஆய்வாளருமான திருச்செல்வம் உரையாற்றினார். வேறு காலகட்டங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வரலாற்றினூடாக தொட்டுக்காட்டினார். அவரைத் தொடர்ந்து தமிழ் ஊடகங்களின் இன்றைய நிலை பற்றி யாழ் உதயன் மற்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் என் வித்தியாதரன் உரையாற்றினார். அவர் உதயன் பத்திரிகையின் செய்தியாளர்கள் உட்பட உதயன் பத்திரிகைக் குழுவினர் மீதான தாக்குதல்கள் கொலைகள் இவற்றினூடாக தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகளை விபரித்தார்.
‘இலங்கையின் இனமுரண்பாட்டில் சிங்கள ஊடகங்களின் பாத்திரம்’ என்ற தலைப்பில் பிபிசி சந்தேசயா சிங்கள சேவை ஊடகவியலாளர் சந்தன பண்டார உரையாற்றினார். இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். சிங்கள மக்களும் இன்றைய உண்மை நிலவரங்களை அறியாதவர்களாகவே உள்ளதாகக் குறிப்பிட்ட பண்டார, ”தமிழ் சிங்கள (ஆங்கிலம் உட்பட) ஊடகங்கள் மக்களுக்கு உண்மைத் தகவல்களை கொண்டு செல்வதில்லை” என்று தெரிவித்தார். யுத்தத்தில் ஈடுபட்டு உள்ள இரு தரப்பினருமே ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை மேற்கொள்வதையும் பண்டார சுட்டிக்காட்டினார்.
ஒரு பேப்பர் பாலாவின் கேள்விக்குப் பதிலளித்த பண்டாரா, ”மற்றவர்கள் என்ன கூறுகிறார்களோ அதைக் கேட்டு சொல்வதைத் தான் ஊடகவியலாளன் செய்கிறான்” என்றும் ”பேச்சுவார்த்தைகள மூடிய கதவுகளுக்குப் பின் நடைபெறுகிறது. ஒருதரப்பினர் வந்து சொல்கிறார்கள் எல்லாம் சுமுகமாக நடந்தது என்று. மற்றைய தரப்பு வந்து சொல்கிறது நாங்கள் இனி பேசத் தயாரில்லை என்று. இதுதான் பிரச்சினை. அவர்கள் பேசும்போது நாங்கள் அங்கு இல்லை. அவர்கள் சொல்வதைத்தான் ஊடகவியலாளன் சொல்ல முடியும்” என்றார் அவர்.
”பிபிசியிடம் எவ்வித தணிக்கைக் கொள்கைகளும் இல்லை” என மற்றுமொருவரின் கேள்விக்குப் பதிலளித்த பண்டார, ”தென்னாபிரிக்க அமைச்சர் பொதுமேடையில் சுயநிர்ணய உரிமை பற்றிச் சொல்லி இருக்கலாம் ஆனால் எங்களிடம் அதனைச் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.
”மேற்கு ஊடகங்கள் எப்போதுமே ஒரு பக்கச்சார்பாகவே நடந்துகொள்கின்றன, முக்கிய விடயங்களில் இலங்கைத் தூதரகத்தின் கருத்துக்களை மட்டுமே கேட்டு வெளியிடுகின்றன” என ஒருவர் குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்த பண்டார, ”அரச தரப்பில் கருத்துச் சொல்ல இலங்கைத் தூதரகம் உள்ளது. தமிழ் மக்கள் சார்பான கருத்துக்கு எங்கே செல்வது. தமிழ் தரப்பை கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால் அன்ரன் பாலா இருக்கும் போதும் நாங்கள் அழைத்தால் அவர் அக்கறை எடுப்பதில்லை” என்றார் பண்டார.
பண்டார தனது பதில்களை மிகவும் அவதானமாக அரசியல் ரீதியாகவும் ஊடகவியலாளனாகவும் என்று சொல்லி தப்பிப்பதாகக் குற்றம்சாட்டிய ஒருவர், மற்றைய தரப்பில் இருந்து வந்திருக்கும் பண்டார, தமிழ் மக்களுடைய நிலை பற்றிய தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தை தெரிவிக்க வேண்டும் என அடம்பிடித்தார். அதற்குப் பதிலளித்த பண்டார, ”சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தன்னை பிபிசி ஊடகவியலாளனாகவே அழைத்து இருப்பதாகவும் பிபிசி ஊடகவியலாளர்கள் தங்கள் சொந்தக் கருத்தை வெளியிட அனுமதிப்பதில்லை” எனவும் தெரிவித்தார். இருப்பினும் தான் பதிலளிப்பதாகக் கூறிய பண்டார, ”இலங்கையில் யுத்தம் ஒன்று நடைபெறுகிறது. அரசாங்கம் யுத்தத்தை நடத்துகிறது. தமிழ் சிங்கள சமூகங்கள் அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து சமூகங்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
நீங்கள் என்னை கேட்கிறீர்கள் நான் தமிழர்களுக்கு அனுதாபமற்றவனா என்று, மறுபக்கம் உள்ள என்னுடையவர்கள் கேட்கிறார்கள் நான் நம்பிக்கைத் துரோகியா என்று. இது ஊடகவியலாளனுக்கு உள்ள பிரச்சினை. நான் தேசப்பற்றாளனாக இருப்பதா? (தமிழர்களுக்கு) அனுதாபியாக இருப்பதா?”, என்று பதில் கேள்வி எழுப்பினார் பண்டார.
‘இலங்கை தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைபு International Federation of Journlist - IFJ - IFJஇன் நிலை’ பற்றி றேச்சல் கோகின் உரையாற்றினார். இலங்கை நிலவரம் பற்றி தன்னிலும் அதிகம் அறிந்து வைத்துள்ளவர்கள் இருப்பதால் தான் அது பற்றி குறிப்பிடத் தேவையில்லை என்று குறிப்பிட்ட றேச்சல் இலங்கையில் நடைபெறும் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஐஎப்ஜே ஜனாதிபதிக்கு எழுதி உள்ளதாகவும் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் பற்றி அதிகம் அக்கறை காட்டப்படுவதால் அவர்கள் யாருக்கும் மேலானவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட றேச்சல் ஆனால் அவர்கள் மிகவும் அவசியமானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். இக்கருத்தினை தலைமை வகித்த பீதுருப்பிள்ளையவர்களும் ”Journalist are nescessary.” என்று சுட்டிக்காட்டினார்.
‘முரண்பாடுகள் பற்றிய செய்தியாக்கத்தின் ஊடக விழுமியங்கள் : மற்றய குரலுக்கும் இடம் வழங்கல்’ என்ற தலைப்பில் The MediaWise Trust அமைப்பின் இயக்குநர் மைக் ஜெம்சன் உரையாற்றினார். Journalist are nescessary evils என்று சிலர் குறிப்பிடுவார்கள் என தனது உரையை ஆரம்பித்த மைக் ஜெம்சன் உலகிலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முன்னிலை வகிக்கும் இலங்கையில், அவ்வாறான தாக்குதல்கள் எவ்வாறு செய்தியாக்கம் செய்யப்படுகிறது என்பது முக்கியமானது என்றார்.
”முரண்பாடுகளைச் செய்தியாக்கம் செய்வது ஹொலிவூட் தாக்குதல் போல் சுவாரஸ்யம் தருவதில்லை” என்று குறிப்பிட்ட மைக் ஜெம்சன், ”தற்கொலைக் குண்டுத் தாக்குதலை விபரிக்கும் போது, அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பற்றி சொல்வது, அதில் தப்பியவர்கள் பற்றிச் சொல்வது, அந்த தாக்குதலை நடத்தியவர்(கள்) பற்றிச் சொல்வது. அவர்களது அரசியல் பற்றிச் சொல்வது. அவசியம். இதில் ஊடகவியலாளர்கள் பெரும்பான்மையினரின் பக்கம் சார்ந்தே செய்தியாக்கம் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இங்கு பிரித்தானியாவில், வட அயர்லாந்து பிரச்சினையில் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு பலமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய மைச் ஜெம்சன், ”எவ்வாறு செய்திகள் பெறப்பட்டாலும் இறுதியில் பாதுகாப்பு அதிகாரிகளினூடாகவே செய்திகள் வெளிவருகிறது என்றும் உண்மைச் செய்திகள் வெளிவருவதில்லை” என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ”இலங்கையில் உள்ள மக்களுக்கு பொதுவான மொழி என்று இல்லாதபடியால் மற்றைய தரப்பினர் பற்றி அறியாதவர்களாகவே இருக்கின்றனர். தற்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளிக்கொண்டு வந்து எல்லோரும் அறியத்தருவது அவசியமானது” என்றார்.
மாலை அமர்வு தமிழ் கார்டியன் பத்திரிகையின் துணை ஆசிரியை செல்வி வினோதினி கணபதிப்பிள்ளையின் தலைமையில் இடம்பெற்றது. மாலை அமர்வில் முதலில் உரையாற்றிய தமிழ் கார்டியன் ஆசிரியர் சுதா நடராஜா, ‘இலங்கையின் சுயமொழி ஊடகங்கள்’ பற்றி உரையாற்றினார். அவர் தனது உரையில் ஊடகங்கள் தகவல்களை மட்டும் எடுத்துச் செல்வதில்லை கருத்தியல்களையும் உருவாக்குவதாகக் சுட்டிக்காட்டினார். சிங்கள ஊடகங்களின் செய்தித் திரிபுகள் பற்றி சுட்டிக்காட்டி தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் சரியான முறையில் செய்திகளை வெளியிடுவதாக நிறுவ முயன்றார். இலங்கையில் உள்ள ஒவ்வொரு இனங்களும் தங்களுக்குள் தேசியவாத இயல்புகளை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சுதா நடராஜா, ஊடகங்கள் அந்தக் கோட்டிலேயே பயணிப்பதாகத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் இருந்து கலந்து கொண்ட இன்பத் தமிழ் வானொலி பணிப்பாளர் பிரபாகரன் பாலசிங்கம், பல்கலாச்சாரத்தை பின்பற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் ஊடகங்கள் பற்றிய அறிமுகத்துடன் தனது உரையை ஆரம்பித்தார். அவர் ஈழமுரசு, உதயம் பத்திரிகைகள், இன்பத் தமிழ் வானொலி, மற்றுமொரு 24 மணிநேர வானொலி இயங்குவதாகக் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் ஊடகவியலாளர்கள் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரண்பட்ட தகவல்களை வெளியிட்டார். ஊடகவியலாளன் ஒரே சம்பவம் தொடர்பாக வேறு வேறு தரப்பினரிடம் இருந்து தகவல்களைப் பெற்று செய்தியை வெளியிடுவது பொறுப்பான செயல் அல்ல என்று குறிப்பிட்ட பிரபாகரன் ஊடகவியலாளன் தான் ஒரு முடிவை எடுத்து அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
அதனை மைக் ஜெம்சன் நிராகரித்தார். மக்கள் மிகவும் விழிப்பானவர்கள் என்றும் கொடுக்கப்படும் தகவல்களில் இருந்து அவர்களே ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றும் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
சுதா நடராஜா போன்று பிரபாகரனும் தமிழ் ஊடகவியலாளர்கள் தக்க முறையில் செய்திகளைப் பதிவு செய்வதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அவுஸ்திரேலிய நேயர்கள் வேறு இணையங்களில் வரும் செய்திகளையும் தங்கள் வானொலியின் நம்பகத்தன்மை காரணமாக அதனூடாகவே கேட்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
‘குற்றவாளிகளாக்கப்படும் சமூகங்கள்’ என்ற தலைப்பில் ஜஸ்ரின் ரான்டோல் உரையாற்றினார். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் எவ்வாறு பிரித்தானியாவில் உள்ள சமூகங்களை குறிவாளிகள் ஆக்குகிறது என்பது பற்றி விபரித்தார்.
மாநாட்டில் இறுதியாக ‘கலாநிதி’ சேரன், ‘ஆபத்தில் தமிழ் ஊடகவியல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ”இலங்கையில் இன்றைய யுத்தம் பற்றியே கூடுதலாக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இன்று இலங்கை தனது சுற்றுச் சூழலை கையாள்வது போல் தொடர்ந்தும் செய்தால், இன்னும் 20 வருடத்தில் இலங்கை மிக மோசமான சூழலை எதிர்நோக்கும் என்கிறார் ஐநா சுற்றுச் சூழல் அதிகாரி. நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நான் தமிழ் ஊடகம் பற்றிய வேறொரு பார்வையை முன்வைக்கப் போகிறேன். விமர்சனத்தூடான ஒரு மதிப்பீடு.” என்ற முகவுரையுடன் சேரன் தனது உரையை ஆரம்பித்தார்.
”உண்மையை கண்டறிவது. சரியான உண்மையை அறிவது. நேரடியாக உண்மையை அறிவது. தகவலைப் பெறுவது. என்ன உண்மை? இதில் நான் எச்சரிக்கிறேன். தகவல் என்பது வரலாற்றுரீதியாக கட்டமைக்கப்பட்டது, சமூகத்தால் தயாரிக்கப்படுவது, அரசியல் ரீதியாக கையாளப்படுவது. இதனை வளங்கிக் கொள்ளாது விட்டால் தவறாகிவிடும். உண்மை என்பது தகவல்கள் மட்டுமல்ல. தகவல்கள் மட்டும் என்றால் அது போதாது. அதற்கு உணர்வு ரீதியான உரிமைகோரல் இருக்க வேண்டும். யுத்த சூழலில் முரண்பாடுகள் நிறைந்த சூழலில் அது மிகவும் முக்கியமானது.
ஒரு ஊடகவியலாளனாக, ஒரு படைப்பாளியாக, சமூகநீதிக்காக செயற்படும் கல்வியாளனாக எனது தத்துவார்த்த அரசியல் பொறுப்பு என்பது நான்கு விடயங்களில் தங்கி உள்ளது.
1. உண்மையை பேசும் கட்டாயம்
2. அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உண்மையைப் பேசுவது
3. மற்றவர்களுக்கு பொறுப்பாக இருத்தல் (மற்றவர்கள்: மற்றைய சமூகங்கள், மற்றைய தத்துவங்கள், …)
4. ஊடகவியல் என்பது ஒரு தொழில் அல்ல. அது ஒரு தொழில்நுணுக்க பொறுப்பும் அல்ல. விழுமியங்களுக்கான பொறுப்பு.
தமிழ் ஊடக விழுமியங்கள் பற்றி சற்று விரிவாக பார்கும் போது
1. தொழில் பயிற்சியின்மையின் போதாமை
2. இணைய ஊடகங்கள் உட்பட்ட ஊடகங்களில் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமையில் உள்ள போதாமை
3. பொருளடக்கத்தில் விடப்படும் தவறுகள்: தேவையற்ற அழுத்தம், பிழையான திகதி, நேரம், இடம், தகவல்
4. ஊடகவியலில் ஊகத்திற்கு இடமளிக்கக் கூடாது. ஆனால் தமிழ் ஊடகங்களில் இது தொடர்கிறது.
5. கருத்துக்களையும் தகவல்களையும் சேர்த்து குழப்புவது தவறானது. வானொலி தொலைக்காட்சிகளில் இது பொதுவான குறைபாடாக உள்ளது.
6. எப்போதும் மீள் மதிப்பீடு செய்வது ஊடக விழுமியங்களுக்கு பொறுப்பாக இருப்பதற்கான முக்கிய அம்சமாகும். நிபுணத்துவ கருத்துக்களை பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால் தமிழ் ஊடகவியலில் இப்பிரச்சினை பெரிதாக இல்லை. ஏனென்றால் தாங்கள் எல்லோரும் நிபுணர்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.
தமிழ் ஊடகங்களில் ஆறு முக்கிய அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
1. நாங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ் பத்திரிகைகளில் தான் அந்த மொழி பற்றிய எவ்வித அறிவும் இல்லாத ஒருவர் ஆசிரியராக இருக்க முடிகிறது. அப்பத்திரிகையை நான் இங்கு இனம்காட்ட விரும்பவில்லை.
2. முக்கியமானது சுயதணிக்கை. ஊடகவியலைப் பொறுத்தவரை சுயதணிக்கை எப்போதுமே பிரச்சினையானது.
3. தேசியப்பற்று. இது எப்போதும் தவறானது என்றல்ல. ஆனால் அதன் எல்லைகள் ஊடக விழுமியங்களின் எல்லைகளை மீறுகின்றது. இது தமிழ் ஊடகவியலில் பெரும் பிரச்சினையாக உள்ளது.
4. ஊடகவியல் வர்த்தக மயப்படுத்தப்படுவதும் சினிமா மயப்படுத்தப்படுவதும்.
5. மிக முக்கியமானது ஊடக விழுமியங்கள். நாங்கள் ஊடகவியலின் உண்மைத் தன்மையை உயர்த்திப் பிடிக்கப் போகிறோமோ? அல்லது எங்களது நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கப் போகிறோமா? என்பது. முரண்பாடு கூர்மையடைந்துள்ள யுத்த சூழலில் இது மிக முக்கியமானது. கருத்துச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் உண்மையான ஜனநாயகத்திற்கு எந்தச் சூழ்நிலையிலும் மிக அவசியமானது என்றே நான் வாதிடுவேன். இது இல்லாமல் உண்மையான ஜனநாயக சமூகத்தை உண்மைத் தகவல்களை அறிந்த சமூகத்தை பார்க்க முடியாது.
6. எங்களிடம் எதிர்வினை இருப்பதில்லை. நாங்கள் ஆசிரியர் பகுதிக்கு எழுதுவதில்லை. நாங்கள் ஊடகங்களை இருவழித் தொடர்பு ஊடகமாக பயன்படுத்துவதில்லை.
இவற்றை நாங்கள் கவனத்தில் கொள்ளாது விட்டால் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்போம். நாங்கள் வருமுன் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் முன்னோக்கி நகர்வதாக இருந்தால் ஊடகவியலின் அடிப்படைகளை கடைப்பிடிக்க வேண்டும்.” என்று கூறி தனது உரையை சேரன் நிறைவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து சர்வதேசத் தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி ஆனந்தி சூரியப் பிரகாசம் நன்றியுரை வழங்கினார். இறுதியாக கேள்வி நேரம் இடம்பெற்றது. வழமை போல் கேள்வி நேரம் சுவாரஸ்யமாக அமைந்தது.
பிரமிக்க வைக்கும் தசாவதாரம் படத்தின் கதை இதுதான்!
சென்னை : படத்தின் சில காட்சிகளை பார்த்தபோதே பிரம்மித்து விட்டேன் என்று முதல்வர் கருணாநிதி முதல் அதிரடி நாயகன் ஜாக்கிசான் வரை பாராட்டிய தசாவதாரம் படத்தின் கதை வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான கெட்அப்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்பிரமாண்ட படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி தசாவதாரம் படத்தை புகழ்ந்து தள்ளினார். நடிகர் ஜாக்கிசானும் தன் பங்குக்கு தசாவதாரத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பற்றி பாராட்டி பேசினார். நடிகர் விஜய் பேசும்போது, தசாவதாரம் படத்தின் டிரைலரை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன், என்றார். இந்த விழாவில் ஏற்புரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், தசாவதாரம் படத்தைப் பற்றிய தகவல்களை இதுவரை ரகசியம் காத்து வந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் பற்றிய செய்திகள் வெளியாகும் என்று கூறினார்.
இந்நிலையில் தசாவதாரம் படத்தின் கதை வெளியாகி கோலிவுட்டை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. 14ம் நூற்றாண்டு கதைதான் தசாவதாரம் படத்தின் கதையாம். 14ம் நூற்றாண்டில் துவங்கும் இப்படத்தில், நாராயணன், சிவன் இருவரையும் வழிபடும் பக்தர்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது. அந்தணரான கமல்ஹாசனிடம், சிவனை வணங்க சொல்லி மன்னன் வற்புறுத்துகிறான். அதற்கு கமல் முடியாது என்று மறுக்கிறார். இதனால் ஆவேசப்படும் மன்னன், கமல்ஹாசனின் கை, கால்களை கட்டி கடலில் தூக்கி எறிய உத்தரவிடுகிறான். அடுத்தடுத்து பிறவிகள் எடுக்கும் கமல்ஹாசனை சிவனா? நாராயணனா? என்ற பிரச்னை தொடர்கிறது. காலத்திற்கு ஏற்றபடி எதிர் எதிராக நின்று மல்லுகட்டுவதுதான் மொத்த கதையும். படத்தில் கமல் எடுக்கும் 10 அவதாரங்களிலும் ஒரு ரங்கநாதர் சிலையும் இடம்பெறுமாம். நடிகை அசின் பிராமண பெண்ணாக வந்து ரங்கநாதரை வழிபடுகிறார். படத்தில் மல்லிகாஷெராவத்தின் கிளுகிளுப்புக்கு பஞ்சமே இருக்காதாம்.
தசாவதாரம் படத்தின் கதையில் க்ளைமாக்ஸ் என்ன என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம் தசாவதாரம் படக்குழுவினர். தசாவதாரம் கதை வெளியானதால் கோலிவுட்டில் இதுபற்றியே பரபரப்பாக பேசப்படுகிறது.
இலங்கை - ஈரான் காதல் சடுகுடு : செல்வம்
இலங்கை - ஈரானுக்கிடையில் ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து:
இலங்கைக்கும், ஈரானுக்குமிடையில் ஆறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏப்ரல் 28ல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் இலங்கை பெருமளவு நன்மையடையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்பு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டில் விவசாய உற்பத்தித்துறைக்கு முக்கியத்துவமளித்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஈரான் அரசாங்கம் வழங்கவுள்ள பொருளாதார உதவியானது நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த காலகட்டத்தில் கிடைக்கவுள்ள பிரயோசனமிக்க உதவியாகும் என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய ஈரானிய ஜனாதிபதிக்கும், பிரதிநிதிகளுக்கும் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயத்தின் இரண்டாம் கட்ட இவ் விஜயத்தின் போது இரு தலைவர்களும் பல்தரப்பு மற்றும் பிராந்தியத்துக்குரிய பிரச்சினைகள் பற்றியும் விரிவாக உரையாடியதுடன் ஈரானியத் தலைவர் தலைவர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவையும் நேற்று (ஏப்ரல் 29) சந்தித்து உரையாடினார். நாட்டின் சகல மதங்களையும் சேர்ந்த சமயப் பெரியார்களையும் ஈரானிய ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.
ஈரான் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது மொத்தம் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படன. வர்த்தக, கப்பல் சேவைத்துறையில் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவி, உமாஓயா பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் விஸ்தரிப்பு, மின் உற்பத்தி, சுங்கம், சுற்றுலா மற்றும் இரு தரப்பு வானொலி தொலைக்காட்சி பிரிவர்த்தனை வலைப்பின்னல், ஊடக ஒத்துழைப்பு போன்ற விடயங்களுக்கு உதவி வழங்கல் போன்றவை இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட்டு உள்ளன என அறிய முடிகின்றது.
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைக்கு 200 பில்லியன் ரூபாவுக்கு (2 பில்லியன் டொலர்) மேற்பட்ட உதவி கிடைக்கவுள்ளது என ஈரானின் இலங்கைத் தூதவர் எம்.எம். ஸஹைர் தெஹ்ரானிலிருந்து தெரிவித்தார். தனி நாடொன்றிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆகக் கூடுதலான உதவித் தொகை இதுவே என அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி அனர்த்தத்தின்போது இலங்கைக்கு 3.2 பில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என அபிவிருத்தி நாடுகள் வாக்குறுதியளித்திருந்தன. பரிஸ் உதவி வழங்கும் கூட்டத்தில் 4 பில்லியன் டொலர் உதவியாக வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மனித உரிமை மீறல் நல்லாட்சி தொடர்பான நிபந்தனைகளை வைத்து இந்த உதவிகளில் அரைவாசியும் இதுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
”ஈரானின் உதவிகள் எமது சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வெகு மதிகளாகும்” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச:
ஈரானிய அரசு எமக்கு வழங்கியுள்ள உதவிகள் எமது சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்த வழங்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த வெகுமதிகளாகுமஎன சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தல் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் நேற்று (ஏப்ரல் 29) காலை இடம்பெற்ற விசேட நிகழ்வின்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது ஈரான் ஜனாதிபதி முஹம்மத் அஹமதி நெஜாத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நவீனமயப்படுத்தல் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது, ”எமது நாட்டுக்கான உதவிகளை வழங்குவதன் மூலம் ஈரான் அரசு இலாபங்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக மனித வர்க்கத்துக்காக நீட்டும் நட்பின் சின்னமாக நாம் இதனைக் காண்கின்றோம். சமாதானம், சகோதரத்துவம், நீதி, நியாயம் என்பனவற்றை ஈரான் வெளிநாட்டுக் கொள்கையாகக் கொண்டுள்ளது. அதிகமான நாடுகளுடன் நற்புறவையும் ஈரான் அரசு பேணிவருகின்றது. சப்புகஸ்கந்தை, உமாஓயா வேலைத்திட்டங்களை ஈரானின் நட்புச் சின்னமாக நாம் காண்கிறோம்.
ஈரானும், இலங்கையும் காலம் காலமாக நெருங்கிய முறையில் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டுள்ளதற்கான சான்றுகள் எம்மிடமுள்ளன. எமது பாரம்பரிய ஏடுகளில் ஈரானை ‘பேர்ஸியா’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. உங்கள் நாட்டின் மூதாதையர்கள் முற்காலங்களில் எமது நாட்டுக்கு வந்து சென்றுள்ளதற்கான சான்றுகள் எம்மிடமிருக்கின்றன. ஈரான் நாட்டின் திட்டமிடலுக்கு அமைவான முறையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள், மதச் சின்னங்கள் இன்னும் எமது மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அனுராதபுரம், சீகிரியா, பொலன்னறுவையில் இவைகள் இன்னும் உள்ளன.
கி.பி. 20 – 25இல் வாசிகதிஸ்ஸ அரசர் காலத்தில் எமது நாட்டுக்கும், பேர்ஸியாவுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பிருந்தமைக்கான சான்றுகள் எம்மிடமுள்ளன. இன்று அல்ல கடந்த அயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேர்ஸியாவிற்கும், இலங்கைக்குமிடையில் இடம்பெற்ற கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பான நாணயங்கள் எம்வசமுள்ளன.
முற்காலங்களில் எமது நாட்டுடன் அதிகமான நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டன. ஒரு கட்டத்தில் ரோம் நாட்டின் வர்த்தகரொருவர் வந்து பேர்ஸியா நாணயத்தை விட ரோம் நாணயம் பெறுமதி மதிக்கதெனத் தெரிவித்தார். ஈரான் ஜனாதிபதியவர்களே, நாணயங்களை விட உங்களது நாட்டின் நட்பு எமக்கு பெறுமதிமிக்கது. தேசங்களுக்கிடையிலான ஒற்றுமை முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக முஸ்லிம்கள் யுத்தத்தின் காரணமாக அதிகமாக பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் இலக்காகி உள்ளார்கள். இஸ்ரேல், பலஸ்தீன் மோதல் உட்பட பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் யுத்த நிலைமைகள் காரணமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கடமையாற்றியதன் மூலம் அந்த மக்களின் பிரச்சினைகள், துன்பங்கள் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள முடிந்தது.
ஒரு சமூகம், இன்னொரு சமூகத்தை பணயமாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லையென கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நான் உறுதியளித்திருந்தேன். பல தசாப்தகாலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை குடியமர்த்துவதற்கு இரண்டு மாதங்கள் மாத்திரமே செலவாகியது. மின்சாரம், பெருந்தெருக்கள், கல்வி ஜீவனோபாய அபிவிருத்தி மாத்திரமன்றி 20 ஆண்டுகளுக்குப் பின் கிழக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மீளக் கிடைக்கவும் வழியமைத்துள்ளோம். ஈரானிய அரசு எமக்கு வழங்கும் பரிசுகள், எமது நாட்டின் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள வழங்கும் சிறந்த வெகுமதிகளாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் இரு நாடுகளினதும் நட்புறவினை எமது எதிர்கால சந்ததியினர் மிக அன்போடும், ஆதரவோடும் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்’’ என்றார்.
”அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து வாழலாம்” ஈரான் ஜனாதிபதி அஹ்மத் நெஜாத்:
அணுசக்தி நெருக்கடி ஏற்பட்டபோது அதனை நாம் ஒன்றுபட்டு எதிர்கொண்டு மீட்சிபெற்றோம். இதேபோல் இலங்கையரும் ஒன்றுபட்டுச் செயற்படும்போது தனித்துவத்துடன் தலைநிமிர்ந்தவர்களாக வாழ முடியும் என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி அஹ்மத் நெஜாத் நேற்று (ஏப்ரல் 29) கொழும்பில் தெரிவித்தார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதத் தலைவர்களுடனான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், ”ஈரான் ஒருகாலத்தில் மேற்குலக சக்திகளுக்கு அடிமைப்பட்டு இருந்தது. மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) தலைமையில் 1979ஆம் ஆண்டில் இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சி காரணமாக இந்த அடிமை நிலைமை முடிவுக்கு வந்தது. இப்போது நாம் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்தவர்களாக வாழுகின்றோம். இதன் பயனாக இலங்கையுடன் கூட நெருக்கமான உறவைப் பேணக்கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
ஒரு நாட்டில் வாழுகின்ற சகல இன, மத, மொழி மக்களும் ஒன்றுபட்டுச் செயற்படும்போது வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளால் அவ்வாறான நாடகளில் எதுவுமே செய்ய முடியாது. இதற்கு ஈரான் நல்ல உதாரணமாக விளங்குகின்றது. ஈரான் அணுசக்தி நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்தது. இதனை ஈரானிய மக்கள் ஒன்றுபட்டு எதிர்கொண்டார்கள். இதன் பயனாக இந்நெருக்கடிகளில் இருந்து நாம் மீட்சி பெற்றிருக்கிறோம். இது உலக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாகும். இலங்கையரும் ஒன்றுபட்டு செயற்படும்போது தனித்துவத்துடன் தலைநிமிர்ந்தவர்களாக வாழக்கூடிய வசதி வாய்ப்புக் கிடைக்கும்.
இலங்கையரை நான் பெரிதும் நேசிக்கிறேன். மீண்டும் இங்கு வரக்கூடிய வாய்ப்பும், உங்களுடன் கலந்துரையாடக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கப்பெறும் எனவும் நம்புகிறேன். இலங்கை மதத் தலைவர்கள் ஈரானுக்கு தாராளமாக வருகை தரமுடியும். எமது மதத் தலைவர்களுடனும், மக்களுடனும் கலந்துரையாடலாம். ஈரான் உங்கள் நாடு. நீங்கள் விரும்பியபடி தாராளமாக வந்து போகலாம்.
இதேநேரம், நாம் உலகின் தற்போதைய நிலைமைகளையும் பார்க்க வேண்டும். சில சக்திகள் உலகின் பல பிரதேசங்களில் மோதல்களைத் தோற்றுவித்து வருகின்றன. இதன் மூலம் அப்பாவி மக்கள் அழிவக்கு இச்சக்திகள் துணை நிற்கின்றன. இச்சக்திகள் நாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்கின்றன. வளங்களையும் சுரண்டுகின்றன. யாதுமறியா குழந்தைகளையும், பெண்களையும் அவர்களது வீடுகளிலேயே இச்சக்திகள் படுகொலை செய்கின்றன. இன, மத மோதல்களைக்கூட இச்சக்திகள் ஏற்படுத்துகின்றன.
தங்களது நலன்களுக்காகவே இச்சக்திகள் இப்படிச் செய்கின்றன. மனிதாபிமானத்துக்கும், கருணைக்கும், அன்புக்கும் பதிலாக அணு குண்டுகளையும், இரசாயன குண்டுகளையுமே இச்சக்திகள் கொண்டிருக்கின்றன. இவற்றை விற்பனை செய்வதற்காக நாடுகளுக்கு இடையிலும், இன, மதங்களுக்கிடையிலும் இச்சக்திகள் சண்டைகளை மூட்டிவிடுகின்றன.
இவர்கள் நாடுகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களையும் விதைக்கிறார்கள். இச்சக்திகள் மேற்கொள்ளும் கலாசார ஆக்கிரமிப்பு காரணமாகவே மனித விழுமியங்கள் கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இப்படியான நிலையில் மனித சமூகம் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவன் மனிதனைப் படைக்கவில்லை. மாறாக குரோதம், பகைமை என்பவற்றுக்கு அப்பால் ஆளுக்காள் உதவிக்கொண்டு அன்பாகவும், சிநேகபூர்வமாகவும், ஐக்கியமாகவும் மனித சமூகம் வாழ வேண்டுமென்பதே இறைவனின் எதிர்பார்ப்பாகும்.
உலகை ஆட்டிப் படைத்து கொடுமை செய்யும் சக்திகள் வெகு விரைவில் உலகிலிருந்து அழிந்து அருகிவிடும். இந்த சக்திகள் வீழ்ச்சி இப்போது ஆரம்பித்து இருப்பபதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. அதேநேரம், நீதி, நேர்மை, நட்பறவு உலகில் மேலோங்கக்கூடிய காலமும் வெகு தொலைவில் இல்லை. அப்போது உலகில் அன்பும், கருணையும், சிநேகமுமே ஆட்சி செய்யும்” என்றார்.
ஈரான் ஜனாதிபதி இந்தியா பயணமானார்:
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த ஈரான் ஜனாதிபதி நேற்று (ஏப்ரல் 29) பி.ப. 1.20 மணியளவில் விசேட விமானம் மூலம் புதுடில்லி புறப்பட்டுச் சென்றார்.
ஈரானிய ஜனாதிபதி தலைமையில் தெற்காசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள குழுவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், பிரதி வெளிவிவகார அமைச்சர், பெற்றோலியம் பிரதியமைச்சர், மின்சக்தி பிரதியமைச்சர் உட்பட 70 பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் நடைபெற்ற 'கவின் கலைமாலை - 2008" நிகழ்வின் படத்தொகுப்பு
பொதுச் சுடரேற்றல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவானது கனேடிய, தமிழீழக் கொடி ஏற்றங்களுடனும், ஈகைச்சுடர், அமைதி வணக்கத்துடனும் தொடர்ந்தது. மக்கள் நீண்ட வரிசையிற் காத்திருந்து மலர்தூவி ஞானசீலன் என்னும் இயற்பெயர் கொண்டு தமிழீழ இலட்சியத்துடன் வாழ்ந்து மறைந்த அம் மண்ணின் மைந்தனுக்கு மலர்களால் மட்டுமன்றித் தமது உள்ளத்து உணர்வுகளாலும் வணக்கம் செலுத்தினார்கள்.
பல வகையான நடன நிகழ்ச்சிகள் மக்களை முற்றாக மெய்மறக்கச் செய்யும் வண்ணம், கருத்துக்கள் பொதிந்தவையாகச் சிறப்புற ஆடிக் காண்பிக்கப்பட்டன. போராட்டத்தின் தற்போதைய நிலமை, அதன் வளர்ச்சிகள் பற்றியும், தாயக மக்களின் துயரங்களும் எடுத்துக் கூறப்பட்டுபு; புலம்பெயர் வாழ் மக்களுக்கிருக்கும் பொறுப்புக்களும் அழுத்தம் திருத்தமாக உரைக்கப்பட்டது. இடையே இளைஞர்களை உள்ளடக்கிய இசைக் குழுவனரால் புதிய முறையிற் சிறார்களையும் கவரும் வண்ணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.
மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் மிகவும் சிறந்த கருத்தினைக் கொண்ட நாடகமும் வழங்கப்பட்டுக் கொடியிறக்கத்துடன் விழாவானது முடிவுக்கு வந்தது. வருகை தந்திருந்த மக்களின் எழுச்சியும், உணர்வும் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.