Monday 28 April 2008

விமான நிலையத்தில் வைத்து நிமால்கா பெர்னாண்டோவிடம் சீ.ஐ.டி விசாரணை

இனமுரண்பாடு தொடர்பான ஐ.எம்.ஏ.டி.ஆர். அமைப்பின் இணைப்பதிகாரி மற்றும் “லக்பிம தாய் சேய்” அமைப்பின் தலைவர் நிமால்கா பெர்னாண்டோவிடம் இரகசிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் ஆலோசகரான நிமால்கா பெர்னாண்டோ தற்போது கிழக்குத் தேர்தல் பிராசார நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள பெண் உரிமை தொடர்பான மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்த போதே அவர் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.




கடவுச் சீட்டை விமான நிலையத்தில் சமர்ப்பித்த போது இரகசிய பொலிஸாரின் பட்டியலில் பெயர் இருப்பதாகக் கூறி நிமால்கா பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டதாகவும், பின்னர் இரகசிய பொலிஸைச் சேர்ந்த அதிகாரியொருவர் விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணித்தியாலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், விமானம் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்னர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மீண்டும் இலங்கைக்கு திரும்பியவுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக நிமால்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவியல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: