லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல ஒலிபரப்பு நிறுவனமாகிய `இன்ரர்நெஷனல் புரோட்காஸ்ரிங் கோப்பறேஷன்' (International Broadcasting Corporation) விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பிரபாகரன் மற்றும் அவருடைய குழுவினருக்கும் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் இதன் மூலம் லண்டனிலிருந்து உலகம் முழுவதும் புலிகள் இயக்கத்துக்காகத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பிரபல வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுபற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குறித்த சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பிரிட்டனில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த போதும் இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாக குறித்த ஐ.பி.சி. எனப்படும் சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பகிரங்கமாக புலிகளுக்கு ஆதரவான கலை, சமூக மற்றும் இயக்க சார்பு நிகழ்ச்சியைத் தாரளமாக ஒலிபரப்பி வருவதாகவும் ஆயினும் இதுவரையில் இதுபற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் குறித்த ஒலிபரப்பு சேவையில் புலிகள் ஆதரவு நிகழ்ச்சிகளைத் தடை செய்யவோ அல்லது நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையையோ எடுக்கவில்லை. இவ்வாறு ஒருபக்கம் புலிகள் இயக்கத்துக்குத் தடை மறுபக்கம் புலிகள் இயக்கச் செயற்பாடுகளுக்கு ஆதரவு என இரு பக்கசார்பு நிலைப்பாடுகளை பிரிட்டிஷ் அர சாங்கத்தின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுவதாக குறித்த சர்வதேச ஊடகங்கள்(what media is it rupavahini???) கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துள்ளன.
லங்காதீப வெளிநாட்டுச் செய்தித்தாள் பகுதி 27.04.2008
Tuesday, 29 April 2008
ஐ.பி.சி பற்றி லங்காதீபவின் உளறல்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment