அனர்த்த ஆபத்துக் குறைப்பு ஒத்திகை பார்த்தல் பயிற்சி வேலைத் திட்டம் இன்று சனிக் கிழமை தன்னாமுனைக் கிராமத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து உலகக் கரிசனை நிறுவனம் கிராம உத்தியோகத்தர் மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மற்றும் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கவுள்ளது. இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களின் போது ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு இப்பயிற்சி நெறி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை மட்டக்களப்பில் தன்னாமுனை, ஏறாவூர் கிராம சேவைகர் பிரிவிலும் அம்பாறையில் மத்திய முகாம் - 5, மண்டானை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுடன் இணைந்து பயிற்சி வழங்கியதுடன் தற்போது அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது எவ்வாறு பெற்ற பயிற்சியினைக் கொண்டு அனர்த்தத்தின் பாதிப்பினை குறைத்துக் கொள்கின்றனர் என ஒத்திகை பார்க்கும் வேலைத் திட்டத்தினையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சித்திரவேல், யூ.என்.டி.பி. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகர் எஸ்.தயானந்தன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் எஸ்.கார்த்திகேசு, உதவி இணைப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
Saturday, 26 April 2008
மட்டக்களப்பில் இன்று அனர்த்த ஆபத்து குறைப்பு ஒத்திகை பார்த்தல் பயிற்சி வேலைத் திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment