முகமாலையின் புவியியல் அமைப்பும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயமும் இணைந்து இராணுவம் யாழ். குடாநாட்டிலிருந்து முன்னேறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு செல்வதற்குத் தடையாக அமைந்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மோதல் நடைபெறும் பகுதி மிகவும் குறுகலானது நகர்வுகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை. இதன் காரணமாக பெருமளவு படையணியையும், இராணுவ வாகனங்களையும் கொண்டு போரிடுபவர்களுக்கு இது மரணப்பொறி போன்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.கடந்த பல வருடங்களில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளிலிருந்து இராணுவம் முன்னேறுவதற்கு பல தடவை முயன்ற போதிலும் பாரிய இழப்புகளுடன் அது பின்வாங்கியுள்ளது.அப்பகுதியின் புவியியல் அமைப்பு தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராகவுள்ளது. அதேவேளை, பதுங்குகுழிகளை அமைத்து தற்பாதுகாப்பு சமரில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகவுள்ளது என சுயாதீன இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். விடுதலைப் புலிகள் அந்த பகுதியில் பெருமளவு கண்ணிவெடிகளை புதைத்துள்ளதுடன் டாங்கிகளை தகர்ப்பதற்குப் பாரிய நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்துகின்றனர். பாரிய குழிகளை வெட்டி இதனை மறைத்துவைத்து விடுகின்றனர். இதனால் இராணுவமும் டாங்கிகளும் அதற்குள் சிக்கிக் கொள்கின்றன என்கிறார் அவர்.
முன்னாள் இராணுவத் தளபதி
முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சிறிபால வீரசூரிய தெரிவிக்கையில், இந்த குறுகிய பகுதியில் தாம் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக விடுதலைப் புலிகள் நேரடி மோதலை தவிர்க்கின்றனர். ஆட்லறி, மோட்டார் போன்ற நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என்கிறார். விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை மேற்கொள்வது மாத்திரமல்லாமல் துல்லியமாகவும் தாக்குகின்றனர். இதற்கு அவர்களது சிறந்த புலனாய்வும் புவியியல் அமைப்பு குறித்த அறிவும் காரணம் எனவும் அவர் தெரிவிக்கின்றார். ஏப்ரல் 2001இல், 2006இல் இராணுவம் முகமாலையிலிருந்து நகர்வை மேற் கொண்டு பாரிய இழப்புகளை சந்தித்து பின்வாங்கியிருந்தது. கடந்த புதன்கிழமை 53 55 படைப் பிரிவுகளின் பாரிய சூட்டாதரவுடன் படை நகர்வை மேற்கொண்ட போதிலும் விடு தலைப் புலிகளின் இரண்டாவது தொகுதி பதுங்குகுழிகளை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்து பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகளின் பலத்தை இரா ணுவம் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எதிர்காலத்தில் மிகவும் கடுமையான ÷ மாதல்கள் இடம்பெறலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Monday, 28 April 2008
வாகனங்கள் சகிதம் போரிடுவோருக்கு முகமாலைப் பகுதி மரணப் பொறி போன்றது --முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சிறிபால வீரசூரிய
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Once bitten twice shy?
Post a Comment