அதீத நம்பிக்கை காரணமாக இலங்கைப்படையினர் இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறிக்குள் வீழ்ந்த சம்பவமே முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும் தற்போது சென்னையில் உள்ள கற்கை மையத்தின் பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சம்பவத்தின் உயரிழப்புகளை குறைத்துக்கூறும் உத்தியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இவ்வாறாக பிழையான செய்தியை தமது மக்களுக்கு கொடுப்பதானது இறுதியில் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என ராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வான்படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளில் வான் தாக்குதல்களை நடத்தி அவர்களின் தாக்குதல் திறனை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை வான்படையினரின் தாக்குதல் திறனை தரைவழியாக சென்று குறைக்கும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இது பெரும்பாலும் சாத்தியமானதாகவே அமைந்துள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் யுத்தகளத்தில் எவர் முதலில் வெற்றிபெறுகிறாரோ அந்த தரப்புக்கே தொடர்ந்தும் களநிலை சாதகமாக அமைவதாக ராமன் குறிப்பிட்டுள்ளார்.
1 comment:
it is raising my eye lid,how come iyengar praising tigers!
Because,truth is always truth!
well done brothers!
step up!
Form Tamileelam!
Post a Comment