தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மையில் வெளிஓயாவில் மேற்கொண்ட வான் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்திய ரேடார் கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்த போதிலும் அதற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்படாமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையினரிடம் எப் 7 ரக விமானங்கள் இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் எவ்வாறு தப்பித்துச் சென்றது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகத் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 27ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தாக்குதல்களை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் வானூர்திகள், படையினரின் பல்குழல் எறிகணைகளை தாக்கியழிப்பதற்காகவே தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Tuesday, 29 April 2008
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தப்படாமை குறித்து விசாரணை:
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
unakkum(singala) PEPPE!
Unga Appan(Indian) Radarukkum PEPPE!
Post a Comment