Saturday 26 April 2008

(3 rd lead)வெலிஓய இராணுவ முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்


தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள், இன்று அதிகாலை வெலிஓயா பிரதேசத்தில் குண்டு வீச்சை நடத்தியுள்ளன. வெலிஓயா இராணுவ முன்னரங்க நிலைகளை குறிவைத்து இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்களினால் 3 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் வெடித்த பொழுதிலும், எந்தவிதமான சேதங்களும் பாதுகாப்புப் படைத் தரப்பினருக்கு ஏற்படவில்லை.

எனினும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்படி, வெலிஓய 233 படையணி தலைமையகத்திற்கும், வெலிஓய பிராந்திய கட்டளையிடும் தலைமையகம் மீது ஒரே சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் குறித்த முகாம்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், காட்டுப் பிரதேசங்களிலேயே இந்த குண்டுகள் வெடித்துள்ளதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது. இந்த குண்டுத் தாக்குதல்கள் காரணமாக எவரும் பாதிக்கப்படவில்லை.

அத்துடன் முன்னரங்க காவலரண் பகுதிகளுக்கு எந்த விதமான சேதமும் இடம்பெறவில்லையும் பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது. விடுதலைப் புலி விமானங்களின் வருகை ரேடார் திரை மூலம் அறிந்த விமானப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத்தை எதிர்கொள்ளும் வகையில், யுத்த விமானங்கள் அந்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டதாக விமான படையின் பேச்சாளர் விங் கொமாண்ட அன்ரு விஜயசூரிய தெரிவித்தார்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளின் விமானங்களின் விமானத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் விமானப் படைப் பேச்சாளர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதற்கு முன்னரும் கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு எண்ணெயத் தாங்கி, அநுராதபுரம் விமானப்படைத் தாளம் மீது தமது விமானத் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: