Sunday, 27 April 2008

வெளியேற்றத்தை நினைவுகூரும் மூதூர் அகதிகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் 2 வாரங்கள் இருக்கும் இவ்வேளையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கிலிருந்து 2006ம் ஆண்டு யுத்த அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வெளியேற்றத்தின் 2வது ஆண்டு நிறைவை வெள்ளியன்று அகதி முகாம்களிலும் உறவினர்கள்-நண்பர்கள் வீடுகளிலும் நினைவுகூர்ந்தனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் இடம்பெயர்வின்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்காகவும் தீபங்கள் ஏற்றப்பட்டு சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட அமைதிப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு சாகிரா முகாமில் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான வைபவத்தில் உரையாற்றிய இடம்பெயர்ந்தோருக்கான நலன் புரி சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன்இ 2006ம் ஆண்டு இதேநாளில் மது பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணை வீச்சுக்களும் விமானக் குண்டு தாக்குதல்களுமே தமது இடப்பெயர்வுக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறினார்

சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு உதவியுடன் அனல் மின் உற்பத்தி நிலையமொன்று அங்கு அமைக்கும் முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: