Sunday 27 April 2008

இலங்கைக்கான ஏயிட்ஸ் ஒழிப்பு நிதி நிறுத்தப்படும் அபாயம்:

இலங்கையுடன் செய்துக்கொள்ளப்பட்ட எயிட்ஸ் ஒழிப்பு தொடர்பான ஐந்து வருட திட்டத்தின் நிதிகளை உலக வங்கி நிறுத்தலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தில் காணப்படும் பிழையான முகாமைத்துவம் மற்றும் நிதிகளின் ஒழுங்கற்ற பயன்பாடு என்பனவே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதி;ர்வரும் ஜூன் மாதத்தில் உலக வங்கி இலங்கை அரசாங்கத்துடன் செய்துக்கொண்ட உடன்படிக்கை நிறைவுக்கு வருகிறது. இதன்பின்னர் அந்த உடன்படிக்கை நீடிக்கப்படமாட்டாது என உலக வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வைத்தியசாலைகளில் தற்சமயம் 125 பேர் எயிட்ஸ நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை உலக வங்கியினால் எயிட்ஸ் ஒழிப்பு திட்டத்திற்காக வழங்கப்பட்ட 150 மில்லியன் ரூபாய் நிதிகளில் சுமார் 30 வீதமான நிதிகள் எவ்வித பயன்பாடும் இ;ன்றி உலக வங்கிக்கு திரும்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: