Monday 28 April 2008

சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே: நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மனைவிக்கு தேசியப் பட்டியல் மூலம் ஆசனமொன்று வழங்கப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள கட்டானை தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக அவரது துணைவியார் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இவர் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் முதல் அரசியலில் பிரவேசித்தார். சுதர்சனி பெர்னாண்டோ புள்ளேயை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால இராஜினாமா செய்ய உள்ளார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபால இராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி, அமைச்சர் விஸ்வா வர்ணபாலவிற்கு வெகுவிரைவில் தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கு அடுத்த படியாக வாக்குகளைப் பெற்ற அனைவரையும் இராஜினாம செய்யக் கோரி அதன் மூலம் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளேவை நியமிக்க ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த முயற்சியின் போது முதல் மூன்று வேட்பாளர்களும் சம்பதம் தெரிவித்த போதிலும் நான்காவது இடத்தை வகித்த நீல் ரூபசிங்க அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இதன்படி, தற்போது மேல் மாகாண கூட்டுறவு அமைச்சராக பதவி வகிக்கும் துலிப் விஜேசேகர வெகுவிரைவில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

No comments: