Sunday, 27 April 2008

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அதிபரை குறி வைத்த தாலிபான்(video annex)

ஆப்கானிஸ்தானில் இன்று சோவியத் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த தினத்தின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சோவியத் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஆப்கானிஸ்தான் 1992ம் ஆண்டு விடுபட்டது.

இதனை அடுத்த நடைபெறும் 16வது ஆண்டு விழாவில் அதிபர் ஹமீத் கர்சாய் கலந்து கொண்டார். விழா நடந்து கொண்டிருந்தது. விழா முடியும் தருவாயில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது, அப்போது திடீரென்று துப்பாக்கி குண்டுகள் பலமுனையிலிருந்தும் ‌பாயத்தொடங்கின.

குண்டு வெடிக்கும் சப்தமும் கேட்டது. இதனால் பதட்டம் அடைந்த கர்சாய் உட்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடி ஒளிந்தனர். இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்ட வசமாக ஹமீத்கர்சாய் உயிர் தப்பினார். விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கர்சாய் , அவருடன் விழா மேடையில் இருந்த அமைச்சர்கள், மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்சென்றனர். ஆனாலும் பார்லிமென்ட் உறுப்பினர்கள் 2 பேர் மட்டும் காயம் அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், விழா மேடைக்கு எதிரே இருந்த வீட்டிலிருந்து இரண்டு தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்கள் ஏ.கே 47 ரக துப்பாக்கி கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார். தாலிபான்களின் இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karzai escapes assassination bid


Apr 27 - Afghan's president is said to be safe after an attempt on his life for which the Taliban is claiming responsibility.

Officials say President Hamid Karzai is unharmed but police say two members of parliament and several civilians have suffered gunshot wounds in the attack in Kabul.

Paul Chapman reports.


No comments: