Wednesday 30 April 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் அவர்களுக்கு உதவத்தயார்- ரணில் விக்ரமசிங்க

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை முற்றாகக் கைவிடுவார்கள் ஆயின் அவர்கள் ஜனநாயகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உதவி வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மக்களை அச்சுறுத்தி வைத்துள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையும் பிரேரணையொன்று நிறைவேற்றப்படுமென ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

மஹாபாரதத்தில் இடம்பெற்றதைப் போன்றே தற்பொழுது கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் இடம்பெற்றுவருகிறது. 100 சகோதரர்களைக் கொண்ட ஒரு பகுதி எதிர்த்தரப்பை அச்சுறுத்தி வைத்திருந்தது. “தற்பொழுது இங்கேயும் சகோதரர்களின் கூட்டணி காணப்படுகிறது” என்றார் ரணில் விக்ரமசிங்க.

மஹாபாரதத்தில் 100 சகோதரர்கள் எதனைச் செய்தார்களோ அதனையே தற்பொழுது இலங்கை அரசாங்கமும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர் என எச்சரிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

ttpian said...

Devils are preaching!

Anonymous said...

Fine! Ranil fine!! What you said about Mahinda is correct.

You should have specified your roll as well.

Anyway the world know that your are playing the Sakuni role.

Tamils will never forget the UNP terrorism - Burning Jaffna Library and Killing 1000s of Tamils in July 1983 are just two examples for UNP Terrorism.