Monday 28 April 2008

சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதான நடவடிக்கை அதிகாரி மிலிந்த ரட்ணாயக்க உறுதியளிக்கப்பட்டவாறு இந்த வாரத்திற்கு பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க போவதாக விமானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த அதிகாரி எமிரேட்ஸ் நிர்வாகத்தின் போது, விதிமுறைகளை மீறிய நிலையில் 4 விமானிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாகவும் இந்த நியாயமற்ற பதவி உயர்வுகளை ரத்துச் செய்து பகிரங்க அறிவிப்பு ஒன்றின் மூலம் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் விமானிகள் கேட்டுள்ளனர்.

இந்த முறையற்ற பதவி உயர்வு குறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கம் பொறுபேற்றுள்ள நிலையில், அதன் தலைவர் பீ;;;.பீ ஜயசுந்தர மற்றும் விமான சேவைகள் அமைச்சர் ஷமால் ராஜபக்ஸ ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதான நடவடிக்கை அதிகாரி மிலிந்த ரட்ணாயக்க பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: