Sunday 27 April 2008

கச்சதீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை வேண்டும்:

1974ஆம் ஆண்டு ஒஉடன்படிக்கைக்கு அமைய கச்சத்தீவு தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜா கோரியுள்ளார்.

இந்த உடனடிக்கை கைச்சாத்திடப்படும் முன்னர் தமிழக அரசாங்கம் இந்த ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும் மத்திய அரசாங்கம் இந்த தீவு முக்கியதுவமற்றது என தெரிவித்து இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. தற்போது மிக முக்கியமானதாக மாறியுள்ள இந்த கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப பெற முடியாது. எனினும் தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டை இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் எந்த இடர்களும் இன்றி அந்த பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட ஆவண செய்ய வேண்டும் எனவும் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவ அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே; இந்த கருத்துக்களை அவர் வலியுறுத்தி உள்ளார்.

No comments: