Tuesday 29 April 2008

பாதுகாப்பு, நியாயம் அனைவருக்கும் பொதுவானது: ஈரானிய ஜனாதிபதி:

அமைதியை தேடும் இனங்களுக்கு ஈரான் உதவும் என ஜனாதிபதி மாமூட் அமதிநிஜாத் தெரிவித்துள்ளார். பல வல்லாதிக்க நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஈரானிய மக்கள் அமைதியை தேடும் இனங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவர் எனவும் எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

அபிவிருத்தி ஒன்று ஏற்படுமாயின் அந்த அபிவிருத்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என தாம் நம்புவதாக குறிப்பட்டார். பாதுகாப்பும் நம்பிக்கையும் சகலருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு நியாயமும் நிலவினால் மாத்;திரமே சமாதானமும் அபிவிருத்தியும் நிலவும். எனினும் உலகில் உள்ள சில நாடுகள் இதற்கு எதிராக உள்ளன. அந்த நாடுகள் யுத்ததின் மூலம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அத்துடன் இந்த நாடுகள் பயங்கரவாதத்திற்கு உதவுகின்றன, உரிமைகளை மீறுகின்றன, வறுமையை அதிகரிக்க செய்கின்றன.

பைகளை மாற்றவரின் பணத்தை கொண்டு நிரப்பிக் கொள்கின்றன எனவும் அமதிநிஜாத் குறிப்பிட்டார். ஈரான் மக்களை போன்று இலங்கை மக்களும் இவ்வாறான ஏமாற்றுகாரர்களுக்கு எதிரானவர்கள். தம்முடைய நலனை மாத்திரம் குறித்து சிந்திப்பதனால் தான் இனங்களின் ஒற்றுமையை சில நாடுகள் விரும்புவதில்லை. இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் அந்த நாடுகள் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பறித்து கொள்கின்றன.

நாடொன்று தனது இரண்டு கால்களை கொண்டு நிற்பதனை அவர்கள் விரும்புவதில்லை. இதனால் பாதிப்பை ஏற்படுத்தும் சக்திகளுக்கு அவர்கள் உதவுகின்றனர் எனவும் ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.

1 comment:

ttpian said...

Yeah Allah!
Devils are preaching!