இலங்கையின் பாதுகாப்புத் துறையினர், ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கொணமிக்கல் ரைம்ஸ் என்ற சஞ்சிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும் 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.
இதேவேளை ரயில் பாதை அபிவிருத்தித் திட்டங்களுக்காக மற்றொரு தொகையாக 100 மில்லியன் டொலர்களையும் இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2008 நிதியாண்டுக்காக இரு தரப்பு வட்டி வீதம் குறைந்த சலுகைக் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களையே இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. இத் தொகையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக வழங்குவது ஒப்பீட்டளவில் பாரிய தொகையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இதுவரை கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான உணர்வுகளுக்கு இடமளிக்கும் இந்த விடயம் குறித்து இந்திய அதிகாரிகள் எவரும் கருத்து தெரிவிக்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ENGLISH NEWS:India to give $100 million soft loan to Sri Lankan defence: Economic Times
Monday, 28 April 2008
இலங்கயிலுள்ள இந்துக்களையும்,கிறுஷ்தவர்களையும்,(தமிழர்களையும் )கொல்ல இந்தியா உதவி.....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
just wait &see-Tamil community in tamilnadu will adopt"VARI KODAMAI IYAKKAM"
once we stop the "FUEL" there will be no "fire"!
No point in waiting-congress should be taught a lesson or two!
Post a Comment