கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை வேட்பாளரான எஸ் நகுலராஜா மீது, ஈ.பீ.-எம்.பீ. 7347 என்ற இலக்கமுடைய, மோட்டார் உந்துருளியில் சென்ற சிலர் தாக்குதல் நடத்தியதுடன் தேர்தலில் இருந்து விலகி கொள்ளாவிட்டால் கொலை செய்ய போவதாக அச்சுறுதல் விடுத்துள்ளனனர்.
இன்று (26) முற்பகல் 9.30 அளவில் மட்டக்களப்பு நகரின் திருகோணமலை வீதியில் தனது ஆதரவாளர்களுடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு காவல்துறையின் தேர்தல் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்படடுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மட்டக்களப்பு காவல்துறையின் தேர்தல் இணைப்பதிகாரி, இந்த சம்பவம் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய சோசலிச கட்சியின் சார்பில் வேட்புமனுதாக்கல் செய்தவர்கள், வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள முகவரிகளில் தங்கியிருப்பதில்லை என்பதால் இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நிலையில் இன்று முற்பகல் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் முன்னர் பாதுகாப்பு தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Saturday, 26 April 2008
ஐக்கிய சோசலிஸ கட்சியின் முக்கியஸ்த்தர்கள் மீது தாக்குதல்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment