Friday, 25 April 2008

மாதா சொரூபத்தை மடுவிற்கு கொண்டு செல்லமாட்டோம். - இராயப்பு யோசப் அடிகள்

மடுமாதா தேவாலயத்தை படையினர் கைப்பற்றியிருந்தாலும், மாதா சொரூபத்தை அங்கு உடனடியாக கொண்டு செல்லமாட்டோம். என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு யோசப் அடிகள் அவர்கள் வெளிநாட்டு ஊடகம் ஓன்றுக்கு பேட்டியளிக்கையில்
இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மடு மாதா தேவாலயம், சிறிலங்கா இராணுவத்தினர் வசமானது தொடர்பாக எமக்கு உத்தியோகபூர்வத் தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
அவ்வாறெனினும் நாங்கள் இப்போதைக்குத் தேவாலயத்திற்குச் செல்லமாட்டோம். அங்கு செல்ல முன்னர் விடுதலைப் புலிகளுடனும், இராணுவத்தினருடனும் தொடர்பு கொண்டு பேசுவோம். அவர்களுடைய உத்தரவாதங்களைப் பெற்றுக்கொண்ட பின்னரே நாங்கள் தேவாலயத்திற்குச் செல்லவிருக்கிறோம்.
ஏனெனில் அந்தப் பகுதியில் போர் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, மடு மாதாவை மீண்டும் பழைய இடத்தில் வைத்து கொலு ஏற்ற முன்னர் உரிய தரப்புகளிடமிருந்து உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.
அப்படியொரு உத்தரவாதத்தை இரண்டு தரப்புகளும் எமக்குத் தரவேண்டும்; தருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

No comments: