Friday, 25 April 2008

நயன்தாரா மயக்கம் : நிஜமான பின்னணி

நயன்தாரா போட்ட மயக்க நாடகத்தின் நிஜமான பின்னணி தெரியவந்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'குசேலன்' படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ரஜினியும் நயன்தாராவும் ஆடிப்பாடும் பாடல் காட்சி ஒன்று படமாகி வந்தது. நேற்று காலை படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நயன்தாரா தலைவலி இருப்பதாகவும் வாந்தி வருவதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த வாரம் 'சத்யம்' படத்திற்காக விஷாலுடன் மழையில் நனைந்தபடி நடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்ததால்தான் மயங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், நிஜமான காரணம் அதுவல்ல என்கிறது 'குசேலன்' படப்பிடிப்பில் உள்ள சில உதவிகள்.

'ஐயா' படத்தில் அறிமுகமானபோது கொழு கொழுவென்று இருந்த நயன்தாரா தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தபிறகு சிலிம்மாக மாறத்தொடங்கினார். இதற்காக உடம்பிலிருக்கும் கொழுப்பை உறிந்து எடுக்கும் சிகிச்சையை எடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்த சிகிச்சை எடுக்கும்போது தேவையான ஓய்வும், டாக்டர் அறிவுறுத்திய உணவும் மேற்கொள்வது அவசியம். தொடர் படப்பிடிப்பினால் நயன்தாரா இதனை கடைப்பிடிக்காததே மயக்கத்திற்கு காரணம் என்கின்றனர் சிலர். இதுதவிர இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

20-20 கிரிக்கெட் போட்டிக்காக நயன்தாரா விளம்பர மாடலாக ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் அவர் அவசியம் இருக்க வேண்டும். ஆனால், 'குசேலன்' படப்பிடிப்பு இருப்பதால் சென்னைக்கு வரமுடியாது. ஒரு வேளை சென்னை கிரிக்கெட்டுக்கு வந்தால் ரஜினி, பி.வாசு, தயாரிப்பாளரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


எனவே இந்த இரு தரப்பிலிருந்தும் தப்பிப்பதற்காகவே மயக்க நாடகத்தை நடத்தி அந்த செய்தியை பத்திரிகைகளில் வரவழைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

நயன்தாராவின் வாந்தி மயக்கத்திற்கு வேறு யாரும் காரணமாக இருப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் செய்தியை படித்தவர்களின் ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும்!

No comments: