Friday, 25 April 2008

பிலியந்தலை குண்டுவெடிப்பு தொடர்பில் 9 பேர் கைது

பிலியந்தல பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
குண்டு வெடிப்பு காரணமாக 68 பேர் காயமடைந்துள்ளனர்
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்;


சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு, களுபோவில மற்றும் பிலியந்தல பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரண கொழும்பு பிரதான வீதியில், நேற்று மாலை 6.45 அளவில் இந்தக்குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிலியந்தல பேரூந்து நிலையத்தில் இருந்து கஹபொல நோக்கி பேரூந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே குண்டு வெடிப்பு சம்பவித்துள்ளது.

பேரூந்தின் ஓட்டுநர் ஆசனத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள மூன்றாவது வரிசை ஆசனத்திலேயே வைக்கப்பட்டிருந்த குண்டுப்பொதியே வெடித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற கெஸ்பேவ பேரூந்து சாலைக்கு சொந்தமான 157 ம் இலக்க பேரூந்தில், பணிகளை நிறைவு செய்த மற்றும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் பயணிகளே அனேகமானோர் இருந்துள்ளனர்.

No comments: