Tuesday 29 April 2008

அதிசக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் கண்டு பிடிப்பு:

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 அதி சக்தி வாய்ந்த ரேடர் கருவிகளை சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இந்த ரேடார் கருவிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தொலைக்காட்சி மற்றும் வீடியோ உபகரணங்கள் என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த கொள்கலனில், செய்மதி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரேடார் தொடர்பாடல் சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 23 லட்சம் ரூபா பெறுமதியான இந்த இயந்திர சாதனங்களை ஜாஎலவில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்த முகவரி ஓரு போலியான முகவரி எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: