Saturday, 26 April 2008

(2nd lead)மணலாற்றில் இன்று மோதல்:

மணலாற்றில் இராணுவத்தினர் மீண்டும் ஒரு வலிந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளது. என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்று (26-04) காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாக்குதலை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் புலிகள் வழிமறித்து தாக்கி வருவதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து த.வி.புலிகளால் மணலாறு சிங்கபுர, கல்குளம் இராணுவமுகாம் மீதும் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வெலி ஓயா, கல்குளம், கிராமங்கள் மீதும் சிங்கபுர இராணுவ முகாம் மீதும் புலிகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இன்றைய மோதல்களில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மண்கிண்டி மலை கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் இன்று காலை 6.00 மணிக்கு சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியடிப்புத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்கிர முறியடிப்புத்தாக்குதல் தொடர்வதாகவும் இதில் படையினருக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இராணுவத்தினர் பதவியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: