Saturday, 26 April 2008

வட, கிழக்கிற்கு இரண்டு பாராளுமன்றங்கள்: விஜிதஹேரத் எச்சரிக்கை.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வட அயர்லாந்து ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வகட்சி பேரவையினால் முன்வைக்கப்படவுள்ள புதிய பரிந்துரைகளில் வடக்கு கிழக்கிற்கு இரண்டு பாராளுமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஜே.வீ.பீ எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாவல கொஸ்வத்த சொலிஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட, ஜே.வீ.பீ.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத,; சர்வகட்சிக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட 11 பேர், இங்கிலாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் புதிய பரிந்துரைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்;டுள்ளார்.

மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற சர்வகட்சிப் பேரவையின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமையினால் இந்த புதிய பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியுடன் கூடிய சமஸ்டி முறையொன்றை அறிமுகப்படுத்த சர்வகட்சி குழு உத்தேசித்துள்ளதாகவும், அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இந்த இரண்டு முறைமைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வகட்சிப் குழுவின் பரிந்துரைகளின் மூலம் பிரிவிணைவாதம் மேலும் வலுப்படும் என விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

No comments: