Wednesday, 30 April 2008

சர்வதேச பிரமுகர் குழுவின் உறுப்பினர்களை மேற்கோள்காட்டி இலங்கை அரசு வெளியிடும் போலி அறிக்கைகள் குறித்து எச்சரிக்கை!!!

சர்வதேச பிரமுகர் குழுவின் உறுப்பினர்களை மேற்கோள்காட்டி இலங்கை அரசு வெளியிடும் அறிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

இவ்வாறு அந்தக்குழுவின் உறுப்பினர் சேர் நைஜெல் ரொட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச பிரமுகர் குழுவின் தலைவர் கே.என். பகவதி தமது முன்னைய கருத்தை திரும்பப் பெற்றுள்ளார் எனத் தெரிவித்து இலங்கை ஜனாதிபதிக்கு பகவதி எழுதிய கடிதமொன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ள நிலையிலேயே அந்தக்;குழுவின் பிரதிநிதி நைஜெல் ரொட்லி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களில்; எவராவது தெரிவித்தார் எனக்கூறி இலங்கை அரசு வெளியிடும் அறிக்கைகளைப் பத்திரிகையாளர்களோ அல்லது வேறு எவரோ மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த பெப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட தமது குழுவின் கலந்துரையாடலின் பின்னர் சர்வதேச பிரமுகர்கள் குழு வெளியிட்ட இறுதிப் பகிரங்க அறிக்கை குறித்து குழு உறுதியாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கான விசேட அறிக்கையாளராக முன்னர் பணியாற்றியிருந்த ரொட்லி, பகவதி தெரிவித்ததாக கூறி அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்துத்தெரிவிக்க மறுத்துள்ளார்.

பகவதி எழுதியதாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள கடிதத்தை வாசித்த பின்னரே தாம் இதுகுறித்துக் கருத்துக்கூறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான கே.என். பகவதி இலங்கை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என்பதை சர்வதேச பிரமுகர் குழு அறியவில்லை எனவும் சர்வதேச பிரமுகர்களின் குழு தனக்கு அளிக்கப்பட்ட ஆணையை மீறியதாக அரசு தெரிவிக்கும் கருத்தையும் தாம் நிராகரிப்பதாகவும்; ரொட்லி குறிப்பிட்டுள்ளார்.



IIGEP Fulfilled Mandated Task - video powered by Metacafe

No comments: