இலங்கை பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன? என விஜய டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர், சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதை நிறுத்தக்கோரியும் ஏப்ரல் 5-ந் தேதி மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், இது சட்ட விரோத என்று கூட்டம் நடத்த தடை விதித்திக்கப்பட்டது.
இந்த நிலையில் 18 நாட்கள் கழித்து தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் மட்டும் போதாது, அடுத்து இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி எனவும் விஜய டி ரஜேந்தர் தெரிவித்துள்ளார்.
Sunday, 27 April 2008
இலங்கை இனப்பிரச்சனை: மத்திய, மாநில அரசுகளின் நிலை என்ன? விஜய டி.ராஜேந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Mappilay,udathada pudita!
Post a Comment