Monday 28 April 2008

இன்று இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி



















இலங்கை அரசால் ஈரான் ஜனாதிபதியை பாதுகாக்க முடியுமா????


ஈரான் ஜனாதிபதி அவரது சர்வதேச எதிரிகளால் கொல்லப்பட்டால் யார் பொறுப்பு???????


புலிகள் மீது பழிபோட்டுவிட்டு அவரை கொல்ல சில வெளிநாட்டு உளவு அமைப்புகள் முனையலாம்...............

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி அஹமதி நஜாதி இன்று (ஏப்ரல் 28) இலங்கை வரவுள்ளார். ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைக்கு 200 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட உதவி கிடைக்கவுள்ளது என ஈரானின் இலங்கைத் தூதவர் எம்.எம். ஸ{ஹைர் தெஹ்ரானிலிருந்து தெரிவித்தார். இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு இந்த உதவிகளை வழங்குவது தொடர்பாக எட்டு ஒப்பந்தங்களை இலங்கையுடன் செய்துகொள்ளவுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சத்திகரிப்பு விஸ்தரிப்புத் திட்டத்துக்கு ஒரு பில்லியன் டொலரும் உமா ஓய பலநோக்கு அபிவிருத்தித் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டொலரும் ஈரான் வழங்கவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அளித்த வாக்குறுதிப்படி இந்த உதவிகள் கிடைக்கவுள்ளன. இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தொடர்பாக கடந்த திங்களன்று ஈரான் ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட மகாநாடொன்று ஏற்பாடு செய்து ஆராயப்பட்டுள்ளது.

தனி நாடொன்றிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆகக் கூடுதலான உதவித் தொகை இதுவே என அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி அனர்த்தத்தின்போது இலங்கைக்கு 3.2 பில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என அபிவிருத்தி நாடுகள் வாக்குறுதியளித்திருந்தன. பரிஸ் உதவி வழங்கும் கூட்டத்தில் 4 பில்லியன் டொலர் உதவியாக வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மனித உரிமை மீறல் நல்லாட்சி தொடர்பான நிபந்தனைகளை வைத்து இந்த உதவிகளில் அரைவாசியும் இதுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், எல்.பி.ஜி. சமையல் எரிவாயுவினை ஈரான் இலங்கைக்கு சலுகை விலையில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதாரண மக்களது நலனில் கரிசனை கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி தனது விஜயத்தின்போது இது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இது நிவாரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈரான் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் முதாதி வாஹிப், அமைச்சர் கலாநிதி பீர் காசிம், உப ஜனாதிபதி ஈ. றஹீம் மசாஹி உட்பட மூன்று பிரதி அமைச்சர்களும் வருகை தரவுள்ளனர்.
அதேநேரம், இன்றைய தினம் இலங்கையில் வெளிவரும் பிரபல அங்கில பத்திகையொன்று, இலங்கைக்கு வழங்கவிருக்கும் நிதியுதவியில் பெரும்பாலான தொகை யுத்த நடவடிக்கைகளுக்கு செலவிடப்படவுள்ளது எனவும் தனது முகப்புப் பக்க செய்தியில் தெரிவித்திருந்தது.

சில மேற்குலக நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை ஈரானிய ஜனாதிபதியின் விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஈரான் ஜனாதிபதி ஜனாதிபதி ராஜபக்ஸ, பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க உட்பட முக்கிய தலைவர்கள் பலரைச் சந்திக்கவுள்ளார்.

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி பாக்கிஸ்தானுக்கும், போகும் வழியில் இந்தியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

No comments: