Tuesday 29 April 2008

கிழக்கு தமிழ் மக்களை இந்த அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது - ஜே.வி.பி--தேர்த‌ல் வரும்போதுதான் கண்கள் திற்ப்பீர்களா????.

அரசாங்கம், கிழக்கு வாழ் தமிழர்களுக்கு ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்காது ஒரு குழுவினரின் அழுத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் கிழக்குத் தேர்தல்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்குத் தேர்தல் நிலவரங்கள் குறித்து வினவிய போதே அவர் இந்தக் கருத்துக்களை எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார்.

ஏனைய அனைத்து கட்சிகளும் ஜனநாயக ரீதியில் தேர்தலில் களமிறங்கிய போதிலும் அரசாங்கம் ஆயுதக் குழுவொன்றுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு வாழ் தமிழர்களை ஒரு குழுவின் அழுத்தங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக அரசாங்கம் மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆயுதக் குழுக்களி;ன் செயற்பாடுகள் காரணமாக கிழக்கு வாழ் தமிழர்கள் பீதியடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் பொலிஸ் மற்றும் அரசாங்க சொத்துக்களை தமது தேர்தல் நடவடிக்கைகளை பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதைவிடுத்து கிரமமாக இந்த அரசாங்கம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

No comments: