Saturday, 26 April 2008

நந்தன குணதிலக்க விமல் தரப்புடன் இணையத் திட்டம்

விமல் தரப்புடன் இணைந்து கொள்வது குறித்து ஜே.வி.பி.யிலிருந்து பிளவுபட்ட நந்தன குணதிலக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரியவருகிறது.

விமல் தரப்பினரின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், ஜே.வி.பி.யினால் மறுதலிக்கப்பட்டுள்ள கொள்கைளை விமல் தரப்பு முன்னெடுக்க முயற்சிக்குமானால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல்கள் இல்லை எனவும் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நந்தன குணதிலக்க சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

No comments: