Saturday, 26 April 2008

காயமடைந்த படையினரை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்

முகமாலையில் இராணுவப் படைவீரர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் மோதல்களின் போது காயமடைந்த படைவீரர்களை பார்வையிடும் பொருட்டு எதிர்க்கட்சி தலைவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோரும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.

கடந்த சில தினங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் படைவீரர்களது சுகம் விசாரிக்க வைத்தியசாலைகளுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: