Saturday, 26 April 2008

இந்திய அமைதிப்படையின் கொலைகளை விட மூதூர், திருகோணமலைச் சம்பவங்கள் பெரிதல்ல: இலங்கை சட்டத்தரணிகள்.

இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போது, விசேட அதிரடிப்படையின் சட்டத்தரணி எஸ் எல் குணசேகர மற்றும் இராணுவத்தின் சார்பில் ஆஜரான கோமின் தயாசிறி ஆகியோர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஆணைக்குழுவின் விசாரணையை கண்டித்துள்ளனர். ஆணைக்குழுவின் விசாரணையை கண்காணிக்க வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டமையானது, கண்டிக்கத்தக்கது.

சொந்தப்பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ளாது ஏன் முதலிலேயே வெளிநாட்டவர்களை நாடவேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்தியர்களையும் நோயாளிகளையும் கொலைசெய்தபோது, அது குறித்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச முக்கியஸ்தர்களின் தலைவர் என் பி பகவதி விசாரணை செய்யவில்லை.

இந்தநிலையில் இந்திய அமைதிப்படையினரின் மோசமான நடவடிக்கைகள் மூதூர் மற்றும் திருகோணமலை சம்பவங்கள் பாரதூரமானவையல்ல என எஸ் எல் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments: